தின்சுகியா மாவட்டம்
தின்சுகியா மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தின்சுகியா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3790 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] பொருளாதாரம்இங்கு தேயிலை, ஆரஞ்சு, இஞ்சி ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர். இங்கு ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கிளை அமைந்துள்ளது. டிக்பாய் நகரியத்தில் இந்திய ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான கச்சா எண்ணெய்க் கிணறுகளும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது. போக்குவரத்துஇந்த மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஓடுகின்றன. 40 கிலோமீட்டர் தொலைவில் திப்ருகார் விமான நிலையம் அமைந்துள்ளது. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,316,948 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 347 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 948 பெண்கள் வாழ்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 70.92% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு அதிகளவில் இந்துக்கள் வாழ்கின்றனர். பலர் பழங்குடியின மக்கள் ஆவர். மக்கள் நேபாளி, பீகாரி, வங்காள மொழி ஆகியவற்றை பேசுகின்றனர். சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia