மஞ்சோய்
மஞ்சோய் அல்லது மஞ்சோய் கூட்டமைப்பு (மலாய்:Manjoi; Gugusan Manjoi; ஆங்கிலம்:Manjoi; Cluster Manjoi; சீனம்:满城) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பெரும் கிராமக் கூட்டமைப்பு. ஈப்போ மாநகரத்தின் துணை நகரம் (Satellite Town). அதே வேளையில் ஈப்போவில் மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் மிகப் பெரிய கிராமப் புறமாகவும் அறியப் படுகிறது. மலேசியாவில் மலாய்க்காரர்களின் மிகப் பெரிய கிராமப் புறம், கோலாலம்பூர் தலைநகரத்தில் ஈப்போ சாலை கம்போங் பாருவில் உள்ளது. அதற்கு அடுத்த பெரியது இந்த மஞ்சோய் கிராமப் புறம் ஆகும். [1] வரலாறுஇந்தக் கிராமம் 1900-ஆம் ஆண்டில் பேராக், போத்தா பகுதியைச் சேர்ந்த உடா கிடால் (Uda Kidal) என்பவரால் நிறுவப்பட்டது. அவரும் அவரின் நண்பர்கள் சிலரும் நல்ல வாழ்வாதாரத்தைக் காண ஈப்போவுக்கு வெளியே இருந்த இந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.[2] உடா கிடாலின் பேரன், அப்துல் மாட் தேசா என்பவர் இன்னும் மஞ்சோய் பகுதியில் வாழ்கிறார். அவரின் கூற்றுப்படி, உடா கிடாலின் தாத்தா தோக் மன்ஜோய் என்பவரின் பெயர் மஞ்சோய் கிராமத்திற்கு வைக்கப் பட்டது.[3] உடா கிடாலின் தாத்தா தோக் மன்ஜோய் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்ளவும்; குடியேறியவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.[4] மஞ்சோய் அமைவுமஞ்சோய் 560.8 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. 6,409 வீடுகள் உள்ளன. 31,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ளனர். மஞ்சோயில் உள்ள துணைக் கிராமங்கள். கம்போங் மஞ்சோய் (Kampung Manjoi) மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia