கோப்பேங் மக்களவைத் தொகுதி
கோப்பேங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gopeng; ஆங்கிலம்: Gopeng Federal Constituency; சீனம்: 务边国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம் (Kampar District); கிந்தா மாவட்டம் (Kinta District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P071) ஆகும்.[7] கோப்பேங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து கோப்பேங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. கோப்பேங்கோப்பேங் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. கோப்பேங் நகரத்திற்கு மிக அருகில் சிம்பாங் பூலாய் எனும் நகரம் உள்ளது. பேராக் மாநிலத்தில் முதன்முதலில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட நகரங்களில் கோப்பேங் நகரமும் ஒன்றாகும். 1890-ஆம் ஆண்டு வரை கிந்தா பள்ளத்தாக்கில் கோப்பேங் ஒரு முன்னணி ஈயச் சுரங்க நகரமாக விளங்கியது. 1850-ஆம் ஆண்டுகளிலேயே மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. கோப்பேங் தமிழர்கள்1900-ஆம் ஆன்டுகளில் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. தமிழர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அதே சமயத்தில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான ஈயச் சுரங்கங்களிலும் தமிழர்கள் வேலை செய்தனர். பிரித்தானியர்கள் அந்தச் சுரங்கங்களை மூடியதும் தமிழர்கள் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டனர். ஆடு மாடுகளை வளர்த்தனர். கோப்பேங்கில் லாவான் கூடா எனும் ஒரு தமிழர்ப் பகுதி உள்ளது. இங்கு கணிசமான அளவிற்கு தமிழர்கள் உள்ளனர். ஓரளவிற்கு வசதியாகவும் வாழ்கின்றனர். கோப்பேங் மக்களவைத் தொகுதி
கோப்பேங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
கோப்பேங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia