லாருட் (P056) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் Larut (P056) Federal Constituency in Perak மாவட்டம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் பேராக் வாக்காளர்களின் எண்ணிக்கை 65,719 (2023)[ 1] வாக்காளர் தொகுதி லாருட் தொகுதி[ 2] முக்கிய நகரங்கள் துரோங் , தைப்பிங் , சங்காட் ஜெரிங் , புக்கிட் கந்தாங் , கோலா சபெத்தாங் , மெக்சுவல் மலை பரப்பளவு 1,129 ச.கி.மீ[ 3] முன்னாள் தொகுதி உருவாக்கப்பட்ட காலம் 1974 கட்சி பெரிக்காத்தான் நேசனல் மக்களவை உறுப்பினர் அம்சா சைனுடின் (Hamzah Zainuddin) மக்கள் தொகை 66,020 (2020)[ 4] முதல் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 1974 இறுதித் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 2022 [ 5]
2022-இல் லாருட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (0.2%)
லாருட் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Larut ; ஆங்கிலம் : Larut Federal Constituency ; சீனம் : 拉律国会议席) என்பது மலேசியா , பேராக் , லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang and Selama District ) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P056 ) ஆகும்.[ 6]
லாருட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லாருட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் தலைப்பட்டணம் தைப்பிங் . இந்த மாவட்டத்தில் தான் மலாயாவின் முதல் தொடருந்துச் சேவை தைப்பிங்கில் இருந்து கோலா செபாத்தாங் வரை தொடங்கப்பட்டது.
தற்சமயம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் இரு தனித்தனியான நகராண்மைக் கழகங்களினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. லாருட், மாத்தாங் பகுதிகளுக்கு தைப்பிங் நகராட்சி ; செலாமா பகுதிக்கு செலாமா நகராட்சி எனும் இரு நகராட்சிகள் செயல் படுகின்றன.
மெக்ஸ்வல் மலை
மெக்ஸ்வல் மலை தற்போது புக்கிட் லாருட் என்று அழைக்கப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் அடைந்தது. இது தைப்பிங் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 1884-ஆம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல்[ 7] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் நினைவாக அந்த இடத்திற்கும் அவருடைய பெயர் வைக்கப்பட்டது.[ 8] [ 9]
மெக்ஸ்வல் மலை மலேசியாவிலேயே மிகவும் பழமையான உல்லாசப் பொழுது போக்கு மலைத் தளம் ஆகும். இது 1250 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மலேசியாவில் இங்கு தான் அதிகமான மழை பெய்கிறது[ 10] .
லாருட் மக்களவைத் தொகுதி
லாருட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
65,719
வாக்களித்தவர்கள் (Turnout )
52,764
78.93%
▼ - 2.91%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
51,875
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
154
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
735
பெரும்பான்மை (Majority )
11,598
22.36%
+ 11.04
வெற்றி பெற்ற கட்சி
பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [ 11]
லாருட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்
கட்சி
செல்லுபடி வாக்குகள்
பெற்ற வாக்குகள்
%
∆%
அம்சா சைனுடின் (Hamzah Zainudin)
பெரிக்காத்தான்
51,875
28,350
54.65%
+ 54.65%
முகமது சபிக் பட்லி மகமூத் (Mohd Shafiq Fhadly Mahmud)
பாரிசான்
16,752
32.29%
- 13.61 % ▼
சுல்கர்னைன் அபிதீன் (Zolkarnain Abidin)
பாக்காத்தான்
-
6,207
11.97%
- 7.56% ▼
அபிசே பசுலான் சாகிடி (Awzey Fazlan Sahidi)
பெஜுவாங்
-
566
1.09%
+ 1.09%
மேற்கோள்கள்
↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) . Election Commission of Malaysia. p. 26. Retrieved 2020-01-29 .
↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF) . Attorney General's Chambers . 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. Retrieved 1 ஜூன் 2024 .
↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29 .
↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. Retrieved 2023-09-24 .
↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) . Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. Retrieved 2020-01-29 .
↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29 .
↑ [Malaysia, Singapore and Brunei By Charles De Ledesma, Mark Lewis, Pauline Savage, Rough Guides (Firm) Published by Rough Guides, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84353-094-5 , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-094-7 ]
↑ [Orientations Published by Pacific Communications Ltd., 1977; Item notes: v.8 1977]
↑ [China By Damian Harper Published by Lonely Planet, 2007; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-357-X , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-357-1 ]
↑ [Malaysia Handbook: The Travel Guide By Joshua Eliot, Jane Bickersteth Published by Footprint Travel Guides, 2002; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903471-27-3 , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903471-27-2 ]
↑ "MySPRSemak" . mysprsemak.spr.gov.my . Retrieved 1 June 2024 .
மேலும் காண்க
வெளி இணைப்புகள்