பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan Datuk; ஆங்கிலம்: Bagan Datuk Federal Constituency; சீனம்: 峇眼拿督联邦选区) என்பது மலேசியா, பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P075) ஆகும்.[7] பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பாகன் டத்தோபாகன் டத்தோ நகரம், பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ.; தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.[8] இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காணலாம். இந்தப் பாகன் டத்தோ கிராம நகர்ப் பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்று அழைப்பது வழக்கம்.[9] மீன்பிடி கிராமங்கள்பாகன் டத்தோ நகரின் சுற்றுப் பகுதியில் சில மீன்பிடி கிராமங்கள் பரவி இருக்கின்றன. சுங்கை தியாங், சுங்கை பூரோங், பாகன் சுங்கை தியாங், பாகான் சுங்கை பூரோங் போன்ற மீன்பிடி கிராமங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமங்கள் கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமங்கள். பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலையில் ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா போன்ற சிறுநகரங்களும் உள்ளன. சுங்கை டூலாங் எனும் இடத்தில் பெரு இறால்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
பாகன் டத்தோ மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாகன் டத்தோ மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia