ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி
ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ipoh Timor; ஆங்கிலம்: Ipoh Timor Federal Constituency; சீனம்: 怡保东区国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P065) ஆகும்.[7] ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. ஈப்போ பாராட்ஈப்போ மாநகரம் இரு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஈப்போவின் கிழக்குப் பகுதி ஈப்போ தீமோர் என்றும்; மேற்குப் பகுதி ஈப்போ பாராட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் இருக்கும் கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது. 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது. மக்களில் பலர் செல்வந்தர்களாகும் நோக்கத்தில் ஈப்போவில் குவியத் தொடங்கினர். ஈப்போ நகரமும் வளப்பம் அடைந்தது. பிராங்க் சுவெட்டன்காம்ஈப்போ நகரம், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடையலாம். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham). 1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது. 1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். அவர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக ஈப்போ அறிவிக்கப்பட்டது.[8] அதற்கு முன்னர் தைப்பிங் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைப் பட்டணமாக இருந்தது. ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி
ஈப்போ பாராட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022![]()
ஈப்போ பாராட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia