புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி
புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Gantang; ஆங்கிலம்: Bukit Gantang Federal Constituency; சீனம்: 武吉干当国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P059) ஆகும்.[6] புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து பாகன் செராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. புக்கிட் கந்தாங்புக்கிட் கந்தாங் நகரம் பேராக் மாநிலத்தின், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் உள்ளன. ஈப்போ மாநகரில் இருந்து 69 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலேசியாவின் மிக நீளமான தொடருந்துச் சுரங்கங்களில் ஒன்றான புக்கிட் பெராப்பிட் தொடருந்து சுரங்கம் இங்குதான் உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் புக்கிட் கந்தாங் உள்ளது. லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்புக்கிட் கந்தாங் நகரத்திற்கு அருகில் உள்ள நகரங்கள்: சங்காட் ஜெரிங்; கம்போங் செ; மாத்தாங்; பாடாங் ரெங்காஸ்; கோலா சபெத்தாங்.[7] இந்தப் பகுதி ஒரு வேளாண் பகுதியாகும். குறிப்பாக நெல், ரப்பர், செம்பனை மற்றும் பழ மரங்கள் பயிர் செய்யப் படுகின்றன. புக்கிட் கந்தாங்கிற்கு 'வெப்பமண்டலப் பழக் கிராமம்' (Tropical Fruit Village) எனும் புனைப்பெயரும் கிடைத்து உள்ளது.[8] இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர்ர் மலாய்க்காரர்கள். லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் தலைப்பட்டணமாக தைப்பிங் விளங்குகிறது. லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மூன்று சிறு மாவட்டங்களும், இந்த மாவட்டத்தின் மூலமாக ஓர் ஐக்கிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு 1850-களில் இருந்து அதன் வரலாறு தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் தான் மலாயாவின் முதல் தொடருதுச் சேவை தைப்பிங்கில் இருந்து கோலா சபெத்தாங் வரை தொடங்கப்பட்டது. புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி
புக்கிட் கந்தாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
புக்கிட் கந்தாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia