புருவாஸ் மக்களவைத் தொகுதி
புருவாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Beruas Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P068) ஆகும்.[7] புருவாஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து புருவாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. புருவாஸ்புருவாஸ் நகரம் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது. முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. புருவாஸ் அருங்காட்சியகம்புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்த நகரில் 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. புருவாஸ் மக்களவைத் தொகுதி
புருவாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
புருவாஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia