லெங்கோங் மக்களவைத் தொகுதி
லெங்கோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lenggong; ஆங்கிலம்: Lenggong Federal Constituency; சீனம்: 玲珑国会议席) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P055) ஆகும்.[6] லெங்கோங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து லெங்கோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. லெங்கோங்லெங்கோங் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலாகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் அகழ்வாராய்ச்சிக்கு மிகவும் புகழ் பெற்ற இடம். இந்த நகரத்தைச் சுற்றிலும் பல நூறு சுண்ணாம்பு குன்றுகளும், மலைகளும் உள்ளன. ரப்பர், செம்பனைத் தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள காடுகள் 90 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இங்கே சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். தொன்மை வாய்ந்த நகரம்லெங்கோங் நகரை ஒரு திறந்த வெளி கண்காட்சியகம் என்று அழைப்பதும் உண்டு. பழங்காலத்தில் பயன் படுத்தப் பட்ட மண் பாண்டங்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது. லெங்கோங் மக்களவைத் தொகுதி
லெங்கோங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
லெங்கோங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia