ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ipoh Timor; ஆங்கிலம்: Ipoh Timor Federal Constituency; சீனம்: 怡保东区国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P064) ஆகும்.[7] ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. ஈப்போ தீமோர்ஈப்போ மாநகரம் இரு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஈப்போவின் கிழக்குப் பகுதி ஈப்போ தீமோர் (Ipoh Timor) என்றும்; மேற்குப் பகுதி ஈப்போ பாராட் (Ipoh Barat) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது. பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போ, மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று அறியப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது பிராங்க் சுவெட்டன்காம்ஈப்போ நகரம், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடையலாம். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham). 1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது. 1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். அவர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக ஈப்போ அறிவிக்கப்பட்டது.[8] அதற்கு முன்னர் தைப்பிங் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைப் பட்டணமாக இருந்தது. ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி
ஈப்போ தீமோர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
ஈப்போ தீமோர் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia