தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Teluk Intan; ஆங்கிலம்: Teluk Intan Federal Constituency; சீனம்: 安顺国会议席) என்பது மலேசியா, பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் (Hilir Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P076) ஆகும்.[7] தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தெலுக் இந்தான்தெலுக் இந்தான் நகரம், பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். ஈலிர் பேராக் மாவட்டத்தின் பெரிய நகரம்; மற்றும் மாவட்டத்தின்தலைப் பட்டணமும் ஆகும்.[8] 2020-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இதன் மக்கள் தொகை 103,065. தெலுக் மாக் இந்தான் எனும் ஒரு பெண்மணியின் பெயரில் இருந்து தெலுக் இந்தான் நகரத்திற்குப் பெயர் வந்தது.[9] பெயர் மாற்றம்1882-ஆம் ஆண்டு, நீரிணை குடியேற்றங்களின் பிரித்தானிய ஆளுநராக இருந்த சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் ஆர்பர்ட் ஆன்சன் (Sir Archibald Edward Harbord Anson) என்பவர் தெலுக் இந்தான் நகரத்திற்கு பதிய நகர வடிவத்தை வரைந்து கொடுத்தார். தெலுக் இந்தான் நகரம் புதிய தோற்றம் பெற்றது. அதன் பின்னர் அவருடைய நினைவாக அந்த நகரத்திற்கு தெலுக்கான்சன் என்று பெயர் வைக்கப் பட்டது. 1982-ஆம் ஆண்டு இந்த நகரத்தின் நூறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. அப்போது பேராக் சுல்தான், தெலுக்கான்சன் எனும் பெயரை தெலுக் இந்தான் என்று மாற்றம் செய்தார். தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி
தெலுக் இந்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தெலுக் இந்தான் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia