கிரிக் மக்களவைத் தொகுதி
கிரிக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gerik; ஆங்கிலம்: Gerik Federal Constituency; சீனம்: 宜力国会议席) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P054) ஆகும்.[6] கிரிக் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து கிரிக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. கிரிக்கிரிக் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், பட்டர்வொர்த் மாநகரில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மலேசியாவை கிழக்கு மேற்காக இணைக்கும் கிழக்கு-மேற்கு விரைவுசாலையின் நடு மையத்தில் அமைந்து இருப்பதால், இந்த நகரை ஓய்வு நகரம் என்றும் அழைக்கிறார்கள். மலேசிய தாய்லாந்து எல்லையில் இருந்து, மிக அருகில், 30 கி.மீ. தொலைவில் தான் இருக்கிறது.[7] மலேசிய கிழக்கு-மேற்கு விரைவுசாலை1880-களில் கிரிக் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. 1870-இல், தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினார்கள். அந்தப் பகுதியின் காடுகளை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்டனர். இந்த இடத்தை கெரிக் என்றும் அழைப்பார்கள். மலேசிய வாழ் தமிழர்கள் கிரிக் என்று அழைக்கிறார்கள். கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மலேசிய கிழக்கு-மேற்கு விரைவுசாலை அமைக்கப் பட்ட பின்னர், இந்த நகரம் வேகமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. கிரிக் மக்களவைத் தொகுதி
கிரிக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
கிரிக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
Notes
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia