தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Malim; ஆங்கிலம்: Tanjong Malim Federal Constituency; சீனம்: 丹绒马林国会议席) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம் (Muallim District); பத்தாங் பாடாங் மாவட்டம் (Batang Padang District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P077) ஆகும்.[7] தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தஞ்சோங் மாலிம்தஞ்சோங் மாலிம் நகரம், பேராக், முவாலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; மற்றும் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. இந்தத் தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகில் புரோட்டோன் சிட்டி (Proton City), பேராங், பேராங் 2020, சுங்கை, சிலிம் ரிவர் எனும் அதன் துணை நகரங்கள் உள்ளன. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நகருக்கு நவீன மயமான தொடருந்து சேவைகள், கூடுதலானச் சிறப்புகளை வழங்கி மேலும் சிறப்புச் செய்து வருகின்றன. சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்அண்மைய காலங்களில் தஞ்சோங் மாலிம் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. புதிய தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம், நவீன பேருந்து நிலையம், சீரமைக்கப் பட்ட சாலைகள், புதிய பள்ளிக்கூடக் கட்டிடங்கள், புதிய தஞ்சோங் மாலிம் மருத்துவமனை ஆகியவை உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து உள்ளது. 1922-ஆம் ஆண்டில் மலேசியாவின் முதல் கல்வி பயிற்சி நிலையம் இங்குதான் கட்டப்பட்டது. அதன் பெயர் சுல்தான் இட்ரிசு பயிற்சிக் கல்லூரி. அந்தக் கல்லூரி 1997-ஆம் ஆண்டில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என தகுதி உயர்வு பெற்றது. தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தஞ்சோங் மாலிம் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia