குரோ
குரோ அல்லது கெரோ (மலாய்: Kroh; Keroh) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், உலு பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இப்போது பெங்காலான் உலு (Pengkalan Hulu) என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரத்திற்கு கிழக்கே கிரிக்; கோலாகங்சார் நகரங்கள்; வட மேற்கே பாலிங்; பெத்தோங் நகரங்கள் உள்ளன. இந்த நகரம் தாய்லாந்து எல்லையில் அமைந்து உள்ள நகரம். அந்த வகையில் தாய்லாந்தின் யாலா மாநிலத்தில் உள்ள பெத்தோங் நகரம் 7 கி.மீ. அருகாமையில் உள்ளது. இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள்; இந்தியர்கள் என மூவினத்தவருடன் தாய்லாந்து மக்களும் வாழ்கிறார்கள்.[1] [2] வரலாறு![]() குரோவின் வரலாறு கெடா மாநிலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்து இருந்த ரேமான் சிற்றரசின் (Kingdom of Reman) காலத்தில் தொடங்கியது. ரேமான் சிற்றரசின் ஆட்சிக் காலம் 1810 – 1902. அந்தக் காலக் கட்டத்தில் ரேமான் சிற்றரசு, தாய்லாந்து பட்டாணி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தாய்லாந்து நாட்டின் ஆளுமை.[3] இதே இந்தக் குரோவில் பிரித்தானியர்களுக்கும்; சயாமியர்களுக்கும்; பேராக் மாநில ஆட்சியாளர்களுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கிளியான் இந்தான் படையெடுப்பு1890-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில ஆட்சியாளர்களுடன் ரேமான் சிற்றரசு தொடர்ச்சியான மோதல்களை மேற்கொண்டு வந்தது. ரேமான் மன்னர், பேராக் மாநிலத்தில் இருந்த கிளியான் இந்தான் மீது படையெடுத்தார். அந்தப் பகுதியில் இருந்த ஈயச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்.[4] ஒரு கட்டத்தில் சயாமியக் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு தன்னாட்சி பெறுவதற்கான முயற்சிகளை ரேமான் சிற்றரசு மேற்கொண்டது. இதனால் சயாமிய அரசாங்கம் சினம் அடைந்தது. ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கை1902-ஆம் ஆண்டில், ரேமான் அரசின் முடியாட்சியை அழிக்க சயாமிய அரசாங்கம் முடிவு கட்டியது. பயங்கரமான போர் நடந்தது. அந்தப் போரில் ரேமான் சிற்றரசை ஆட்சி செய்த இளவரசர் துவான் லேபே (Tuan Lebeh) கைது செய்யப் பட்டார். 20 ஆண்டுகள் பாங்காக் நகருக்கு அருகில் இருந்த சிங்கோராவில் சிறை வைக்கப் பட்டார்.[5] 1909-ஆம் ஆண்டில் ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கை. அதன் பிறகு 1909 சூலை 16-ஆம் தேதி உலு பேராக் மாவட்டத்தின் வடக்கு பகுதி, குரோ நிலப்பகுதி மலாயா கூட்டாட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்டது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia