தைப்பிங் (P060) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் Taiping (P060) Federal Constituency in Perak மாவட்டம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் பேராக் வாக்காளர்களின் எண்ணிக்கை 121,566 (2022)[ 1] வாக்காளர் தொகுதி தைப்பிங் தொகுதி[ 2] முக்கிய நகரங்கள் தைப்பிங் , தைப்பிங் ஏரித் தோட்டம் , புக்கிட் கந்தாங் , சங்காட் ஜெரிங் , தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை , கமுந்திங் , புக்கிட் மேரா (கிரியான்) , செமாங்கோல் , கோலா சபெத்தாங் பரப்பளவு 118 ச.கி.மீ[ 3] முன்னாள் தொகுதி உருவாக்கப்பட்ட காலம் 1974 கட்சி பாக்காத்தான் மக்களவை உறுப்பினர் வோங் கா வோ (Wong Kah Woh) மக்கள் தொகை 130,712 (2020) [ 4] முதல் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 1974 இறுதித் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 2022 [ 5]
2022-இல் தைப்பிங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[ 6]
இதர இனத்தவர் (1.5%)
தைப்பிங் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Taiping ; ஆங்கிலம் : Taiping Federal Constituency ; சீனம் : 武吉干当国会议席) என்பது மலேசியா , பேராக் , லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut Matang Selama District ) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P060 ) ஆகும்.[ 7]
தைப்பிங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து தைப்பிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தைப்பிங்
தைப்பிங் நகரம் பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாக அறியப்படும் இந்த நகரில் அழகிய பூங்காக்கள் , அழகான குளங்கள் உள்ளன.
ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிகச் சிறந்த இடம் என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். ஆண்டு முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாகவே இருக்கும். ஈப்போ மாநகரத்தில் இருந்து வடக்கே 72 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
தைப்பிங் சாதனைகள்
தைப்பிங் நகரத்திற்குப் பல சாதனைப் பதிவுகள் உள்ளன. மலேசியாவின் :
முதல் ஈயச் சுரங்கம் (1844)
முதல் உல்லாசத் தளம் - மெக்சுவல் மலை (1844)
முதல் நீச்சல் குளம் - கோரனேசன் நீச்சல் குளம் (1870)
முதல் பீரங்கிப் படை (1870)
முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (1874)
முதல் பெங்குலு கிராமத் தலைவர் அலுவலகம் (1875)
முதல் பள்ளிவாசல் - துங்கு மந்திரி பள்ளிவாசல் (1870)
முதல் பிரித்தானிய ஆளுநர் மாளிகை (1877)
முதல் துறைமுகம் - போர்ட் வெல்ட் (1877)
முதல் ஆங்கிலப் பள்ளி - கமுந்திங் மத்தியப் பள்ளி (1878)
முதல் தொடருந்து நிலையம் (1881)
தைப்பிங் மக்களவைத் தொகுதி
தைப்பிங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
121,566
வாக்களித்தவர்கள் (Turnout )
86,136
69.73%
▼ - 8.85%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
84,769
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
146
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
1,121
பெரும்பான்மை (Majority )
25,529
30.12%
+ 9.14
வெற்றி பெற்ற கட்சி
பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [ 8]
தைப்பிங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்
கட்சி
செல்லுபடி வாக்குகள்
பெற்ற வாக்குகள்
%
∆%
வோங் கா வோ (Wong Kah Woh)
பாக்காத்தான்
84,769
47,098
55.56%
- 6.09% ▼
சி தியான் செங் (See Tean Seng)
பெரிக்காத்தான்
-
21,569
25.44%
+ 25.44%
நியோ சூ சியோங் (Neow Choo Seong)
பாரிசான்
-
14,599
17.22%
- 5.17 % ▼
லியோ தை இயி (Leow Thye Yih)
சுயேச்சை
-
1,154
1.36%
+ 1.36%
மோகனன் மாணிக்கம் (Mohganan Manikam)
சுயேச்சை
-
236
0.28%
+ 0.28%
ராம மூர்த்தி @ இசுடீபன் ராம் (Rama Moorthy @ Steven Ram)
சுயேச்சை
-
113
0.13%
+ 0.13%
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்