பத்தாங் பாடாங் மாவட்டம்
![]() பத்தாங் பாடாங் (மலாய்: Batang Padang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். தாப்பா மாவட்ட மன்றம் (Tapah District Council) எனும் நகராட்சி மன்றத்தினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. தாப்பாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் பீடோர்; தாப்பா; சுங்கை. 2016 ஜனவரி 11-ஆம் தேதி, பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இருந்து முவாலிம் மாவட்டம் எனும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் முன்பு இருந்த தஞ்சோங் மாலிம் துணை மாவட்டம்; புதிய முழு மாவட்டமாக மாற்றம் கண்டது.[1] 2007 ஆகஸ்ட் மாதம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் பெரிய நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் மாநில அரசாங்கம் அறிவித்தது. அண்டை மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் நீர் விற்பனைக்குத் திட்டம் வகுக்கப் பட்டது.[2] நிர்வாகப் பிரிவுகள்பத்தாங் பாடாங் மாவட்டம் 4 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தில் பத்தாங் பாடாங் மாவட்ட பிரதிநிதிகளின் பட்டியல் (டேவான் ராக்யாட்) (2021). மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
பேராக் மாநில சட்டமன்றம்பேராக் மாநில சட்டமன்றத்தில் பத்தாங் பாடாங் மாவட்டப் பிரதிநிதிகள் (2021)
பொது போக்குவரத்துஇரயில் சேவைபத்தாங் பாடாங் மாவட்டத்தில் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. அவை: தாப்பா தொடருந்து நிலையம் மற்றும் சுங்கை தொடருந்து நிலையம்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia