பாகன் செராய் மக்களவைத் தொகுதி
பாகன் செராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan Serai; ஆங்கிலம்: Bagan Serai Federal Constituency; சீனம்: 峇眼色海国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P058) ஆகும்.[6] பாகன் செராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பாகன் செராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பாகன் செராய்பாகன் செராய், பேராக், கிரியான் மாவட்டத்தில், பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது. மலேசியாவின் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டமான கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) இங்குதான் உள்ளது.[7] பாகன் செராய் நகருக்கு அருகில் செமாங்கோல்; அலோர் பொங்சு; பாரிட் புந்தார்; கோலா குராவ்; கோலா கூலா நகரங்கள் உள்ளன. பாகன் செராய் மக்களவைத் தொகுதியின் பெயரும் பாகன் செராய் என அழைக்கப் படுகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் செராய் மக்கள்இங்கு வசிக்கும் மலாய் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் எனும் இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். இங்குள்ள கடைகள் பெரும்பாலும் சீனர், மலாய் மக்களுக்குச் சொந்தமானவையாக உள்ளன. இந்தியர்கள் கணிசமான அளவு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். மலாய் மக்கள் வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். பாகன் செராயில் அதிகமாக நெல் வயல்கள்; செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் செராய் மக்களவைத் தொகுதி
பாகன் செராய் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாகன் செராய் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia