தாப்பா மக்களவைத் தொகுதி
தாப்பா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tapah; ஆங்கிலம்: Tapah Federal Constituency; சீனம்: 打巴国会议席) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம் (Batang Padang District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P072) ஆகும்.[7] தாப்பா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து தாப்பா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தாப்பாதாப்பா நகரம் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மேற்குப் பகுதியில் இருக்கும் தெலுக் இந்தான் நகரை இந்த நகரத்தின் புதிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. முன்பு காலங்களில் போக்குவரவுகளுக்கு ஆறுகளே முதன்மையாக விளங்கின. இந்த நகரத்திற்கு அருகாமையில் பீடோர், சுங்கை, கம்பார், துரோலாக் போன்ற நகரங்கள் உள்ளன. மலேசியாவில் புகழ்பெற்ற கேமரன் மலைக்குச் செல்லும் நுழைவாயிலாகவும் இந்த நகரம் அமைகின்றது. 2010-ஆம் ஆண்டுகள் வரையில், கேமரன் மலைக்குச் செல்பவர்கள், தாப்பாவில் இருந்து செல்வது வழக்கம். லாத்தா கிஞ்சாங் பழங்குடியினர் கிராமம்தற்போது சிம்பாங் பூலாய் நகரில் இருந்து கேமரன் மலைக்கு, புதிய இருவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அண்மைய காலங்களில் பழைய தாப்பா பாதையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தாப்பா நகரம் இருக்கிறது. தாப்பா நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் லாத்தா கிஞ்சாங் எனும் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைவதற்கு செண்டிரியாங் எனும் சிறுநகரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். தாப்பா மலை அடிவாரக் காடுகளில் பல பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. தாப்பா மக்களவைத் தொகுதி
தாப்பா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022![]()
தாப்பா மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia