பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Parit Buntar; ஆங்கிலம்: Parit Buntar Federal Constituency; சீனம்: 巴里文打国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P057) ஆகும்.[6] பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பாரிட் புந்தார்பாரிட் புந்தார் சுற்றுப்புறப் பகுதிகளில் பெருமளவில் நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது. பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது. சுங்கை ஆச்சே, பாகன் தியாங், தஞ்சோங் பியாண்டாங், கோலா குராவ் போன்ற இடங்களில் மீன்பிடித் தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாரிட் புந்தார் நகர வளாகம் (Parit Buntar City Center); வணிகத்திற்கும் தொழில்துறைக்கும் முதன்மை வகிக்கின்றது. கிரியான் மாவட்டம்பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் வடக்கே பினாங்கு; கெடா மாநிலங்கள் உள்ளன. முக்கிய நகரம் பாரிட் புந்தார். கிரியான் மாவட்டம் 8 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவையாவன:
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி
பாரிட் புந்தார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாரிட் புந்தார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia