இந்தியக் குடியரசுத் தலைவர்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆவார். தோற்றம்![]() ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தை அடைந்தது, ஆரம்பத்தில் காமன்வெல்த் நாடுகளுக்குள் ஓர் ஆதிக்கமாக ஆறாம் ஜோர்ஜ் ராஜாவாக இருந்தார், இவரே இந்நாடுகளுக்கு கவர்னர் மற்றும் ஜெனரலாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார். இருப்பினும், இதைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சபை, அம்பேத்கரின் தலைமையில், நாட்டிற்கு முற்றிலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்பு இறுதியில் நவம்பர் 26, 1949 இல் இயற்றப்பட்டு, 26 ஜனவரி 1950 இல் நடைமுறைக்கு வந்தது மற்றும் இந்தியா குடியரசு நாடாக மாறியது. மன்னர் மற்றும் கவர்னர் ஜெனரல் அலுவலகங்கள், இந்திய குடியரசுத் தலைவரின் புதிய அலுவலகத்தால் மாற்றப்பட்டன, இராசேந்திர பிரசாத் அதன் முதல் பதவியில் இருந்தார். இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் சட்ட விதிகளை பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்பு, குடியரசுத் தலைவருக்கு பொறுப்பு மற்றும் அதிகாரம் அளிக்கிறது. தகுதிகள்
அதிகாரங்கள் மற்றும் பணிகள்சட்டமுறை அதிகாரங்கள்
செயல்முறை அதிகாரங்கள்
நீதித்துறை அதிகாரங்கள்உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமனம் செய்தல். நியமன அதிகாரங்கள்கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
நிதி அதிகாரங்கள்ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிதி ஆணையத்தை நிறுவி மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கான நிதியை பகிர்வார். இராணுவ அதிகாரங்கள்இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி. மன்னிக்கும் அதிகாரங்கள் ஷரத்து 72உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு. அவசரநிலை பிரகடன அதிகாரங்கள்தேசிய அவசரநிலை பிரகடனம்போர், வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற சூழல்களில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தேசிய அவசரநிலையை வெளியிடுகிறார். மாநில அவசரநிலை பிரகடனம்நிதிசார் அவசரநிலை பிரகடனம்குடியரசுத் தலைவர் ஆட்சிஅதிகபட்சமாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 முறையும், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் தலா 8 முறையும், புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 6 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.அசாமில் 4, டெல்லி 1, கோவா 5, ஹரியாணா 3, ஹிமாச்சல பிரதேசம் 2, ஜம்மு & காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 3, கேரளா 5, மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 2, மிஜோரம் 3, நாகாலாந்து 4, ராஜஸ்தான் 4, சிக்கிம் 2, திரிபுரா 3, தமிழ்நாடு 4, மேற்கு வங்கம் 4 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது.[2] தேர்தல் முறைகுடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநிலங்களின் கீழ்ச்சபைகளின் உறுப்பினர்களால் மறைமுக ஒற்றை மாற்று விகிதாச்சார முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.[3] இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும்.[4] 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர். வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல் தெரிவாகத் தேர்ந்தெடுத்திருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட வேண்டும். வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia