எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
எகிப்தின் பதினெட்டாம் வம்சம் (Eighteenth Dynasty of Egypt) (Dynasty XVIII), எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட அரசமரபாகும். இவ்வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் புது எகிப்து இராச்சியம் அரசியல், சமூகம் மற்றும் கட்டிடக் கலைகளில் பெரும் புகழுடன் விளங்கியது. இவ்வம்சத்தை நிறுவியவர் முதலாம் அக்மோஸ் ஆவார். இப்பதினெட்டாம் வம்சம் பண்டைய எகிப்தை கிமு 1549/1550 முதல் கிமு 1292 முடிய 258 ஆண்டுகள் ஆண்டது. இப்பதினெட்டாவது வம்ச பார்வோன்களில் நான்கு பேர் தூத்மோஸ் என்ற பெயர் கொண்டதால், இவ்வம்சத்தை தூத்மோஸ் வம்சம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வம்சத்தாருக்கும் மெசொப்பொத்தோமியாவின் மித்தானி இராச்சியத்தினருக்கும் இடையே கடும் பகை இருந்தது. இவ்வம்சத்தின் முதலாம் அக்மோஸ், அக்கெனதென், துட்டன்காமன், மூன்றாம் அமென்கோதேப் உள்ளிட்ட பார்வோன்களில் பலர் புகழுடன் விளங்கினர். துட்டகாமனின் சிற்பங்களை ஹேவர்டு கார்ட்டர் என்பவரால் 1922-இல் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தை ஆண்ட பல அரசமரபுகளில், பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்களில் இராணிகள் நெஃபர்டீட்டீ மற்றும் ஆட்செப்சுட்டு ஆகிய இரண்டு பெண் ஆட்சியாளர்கள் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டது குறிப்பிடத்தக்கது. [1] வரலாறு18-ஆம் வம்சத்தின் துவக்க ஆட்சிக் காலம்![]() ![]() எகிப்தின் பதினெட்டாம் அரசமரபை நிறுவியவர், எகிப்தின் பதினேழாவது வம்ச மன்னர் காமோசின் மகன் அல்லது சகோதரரான முதலாம் அக்மோஸ் ஆவார். இவரது ஆட்சிக் காலம், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது முடிவிற்றது. அதனைத் தொடர்ந்து புது எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. அக்மோசின் மகன் முதலாம் அமென்கோதேப் புது எகிப்திய இராச்சியத்தின் மன்னரானார். [2] முதலாம் அமென்கோதேப்பிற்கு ஆட்சி பீடமேறிய முதலாம் தூத்மோஸ் ஆட்சியின் போது எகிப்திய இராச்சியத்தை கிழக்கே மெசொப்பொத்தேமியாவின் யூப்பிரடீஸ் ஆறு வரையும், தெற்கே நைல் ஆறு உற்பத்தியாகுமிடம் வரை விரிவாக்கம் செய்தார். இவருக்குப் பின் இரண்டாம் தூத்துமோஸ் மற்றும் அவனது மனைவி அட்செப்சுத் (முதலாம் தூத்துமோசின் மகள்) எகிப்தை ஆண்டனர். பின்னர் இராணி அட்செப்சுத்தின் வளர்ப்பு மகன் மூன்றாம் தூத்மோஸ் இருபது ஆண்டுகள் எகிப்தை மிகப்பெரிய படை வலிமையுடன் ஆண்டார். பின்னர் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் அமென்கோதேப்ப்பின் ஆட்சிக்குப் பின்னர் மூன்றாம் அமென்கோதேப் ஆட்சி செய்தார். மூன்றாம் அமென்கோதேப்பின் ஆட்சிக் காலத்தில், எகிப்தில் பெரிய அளவிலான பிரமிடுகள் மற்றும் கட்டிட அமைப்புகள் கட்டப்பட்டது. இவர் நிறுவிய கட்டிட அமைப்புகளுக்கு நிகராக எகிப்தின் இருபத்தி ஒன்பதாவது வம்ச மன்னர் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் எகிப்தில் பெரிய அளவிலான கட்டிட அமைப்புகள் நிறுவப்பட்டது.[3] அக்கெனதென், அமர்னா காலம், மற்றும் துட்டன்காமன்![]()
![]() மூன்றாம் அமென்கோதேப் தன் மகன் நான்காம் அமென்கோதேப்புடன் பனிரெண்டு ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டு ஆண்டார். இந்த ஆட்சிக் காலத்தின் ஐந்தாம் ஆண்டில் நான்காம் அமென்கோதேப் தனது பெயரை அக்கெனதென் எனப்பெயர் மாற்றம் செய்து கொண்டு, தனது தலைநகரத்தை தீபையிலிருந்து அமர்னாவிற்கு மாற்றிக் கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அதின் எனும் சூரியக் கடவுளின் வழிபாடு முதன்மைப் பெற்றது.[4] பார்வோன் அக்கெனேதனின் மறைவிற்குப் பின்னர் அவரது இராணி நெஃபர்டீட்டீ ஆட்சிக் கட்டிலில் ஏறினார். பின்னர் இராணி நெபெர்திதியை வீழ்த்தி துட்டன்காமன் அரியணை ஏறினார். ஆனால் இளவயதில் துட்டகாமன் மாண்டார். [5] ஆய் மற்றும் ஹோரம்ஹேப்![]() எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் இறுதி இரு மன்னர்களான ஆய் மற்றும் ஹோரம்ஹேப் ஆகியோர் எகிப்திய அரண்மனையின் அதிகாரிகளாக இருந்தவர்கள். மன்னர் துட்டகாமனின் விதவைச் சகோதரியை மணந்தவர் ஆய். வாரிசு இன்றி குறுகிய காலம் ஆண்ட மன்னர் ஆய்யை, எகிப்தின் படைத்தலைவர் ஹொரெம்ஹெப், இராணுவப் புரட்சியின் மூலம் எகிப்தின் மன்னரானார். [5] ஆண் குழந்தை இல்லாத மனன்ர் ஹோரேம்ஹெப், முதலாம் ராமேசஸ் என்பவரை தனது வாரிசாக அறிவித்து இறந்தார்.கிமு 1292-இல் அரியணை ஏறிய முதலாம் ராமேசஸ் பத்தொன்பதாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆக முடிசூட்டிக் கொண்டார். ![]() காலக் கணிப்புகதிரியக்கக்கரிமக் காலக் கணிப்பின்படி எகிப்தின் 18-ஆம் வம்ச காலத்தின் தொடக்கம் கிமு 1550-1544 எனக்கணிக்கப்பட்டுள்ளது.[6] பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்கள்எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன்கள் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1550 முதல் கிமு 1298 முடிய 250 ஆண்டுகள் ஆண்டனர்.[7] இப்பார்வோன்களில் பலரை தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டனர்.[8] பண்டைய அண்மை கிழக்கின் நகர இராச்சியங்களின் அரச குடும்ப இளவரசிகளை, 18-ஆம் வம்ச மன்னர்கள் மணந்ததை ஆப்பெழுத்து களிமண் பலகைகளில் ஆவணப்படுத்தியுள்ளதை தீபை நகரத் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த அமர்னா நிருபங்கள் மூலம் அறியப்படுகிறது.[9]
பதினெட்டாம் வம்சத்தின் காலக்கோடுகள்![]() படக்காட்சிகள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia