அக்மோஸ்-மெரிதமுன்
அக்மோஸ்-மெரிதமுன் (Ahmose-Meritamun or Ahmose-Meritamon) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ்- அரசி அக்மோஸ்-நெபர்தாரி இணையரின் மகளும், பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் அக்காவும், மனைவியும் ஆவார்.[1] மிக அழகான இந்த அரசி இளமையில் மறைந்த போது, தேர் எல் பகாரியின் கல்லறையில், இவரது உடலை மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது. அரசி அரசி அக்மோஸ்-நெபர்தாரிக்குப் பின்னர் அக்மோஸ்-மெரிதமுன் அமூன் கடவுளின் மனைவியாக வழிபடப்பட்டார். 1817-இல் கர்னாக் தொல்லியல் அகழாய்வின் போது அரசி அக்மோஸ்-மெரிதமுனின் சுண்ணாம்புக் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.[2] 1930-இல் தேர் எல் பகாரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது, அரசி அக்மோஸ்-மெரிதமுனின் மம்மி மரப்பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது.[3] ![]() ![]() பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களின் மம்மி ஊர்வலம்3 ஏப்ரல், 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து எகிப்தின் பதினேழாம் வம்சம் முதல் எகிப்தின் இருபதாம் வம்சம் வரையிலான புகழ்பெற்ற 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது அரசி அக்மோஸ்-மெரிதமுன் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia