தொடர் வரிசை எண்
|
வெளியான நாள்
|
திரைப்படம்
|
கதாபாத்திரம்
|
தயாரிப்பு
|
குறிப்புகள்
|
59 |
14. சனவரி 1960 |
இரும்புத்திரை |
மாணிக்கம் |
ஜெமினி பிலிம்ஸ் |
வசுந்தரா தேவி, வைஜெயந்தி மாலா தாய், மகளாகவே இப்படத்தில் நடித்தனர். இதில் சரோஜாதேவி அவா்கள் இரண்டாவது கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்திருப்பார்.
|
60 |
4. மார்ச் 1960 |
குறவஞ்சி |
கதிரவன் |
மேகலா பிக்சர்ஸ் |
முதலில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி நடிப்பதாக விளம்பரம் வெளியானது. பின்பு இப்படத்தின் கதை வசனம் எழுதிய கருணாநிதி அவா்களுக்கும் எஸ்.எஸ்.ஆர் அவா்களுக்கு பிரச்சனை என்பதால் இப்படத்தி்ல் சிவாஜி கணேசன் & சாவித்திாி அந்த கதாபாத்திரத்தில் இணைந்து நடித்தனா்
|
61 |
13. ஏப்ரல் 1960 |
தெய்வப்பிறவி |
மாதவன் |
கமால் பிரதர்ஸ் |
இந்த படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகிய மூவரும் போட்டி போட்டு நடித்தனர். ஏவி.எம்.மின் இணை தயாரிப்பு
|
62 |
27. மே 1960 |
ராஜபக்தி |
தளபதி விக்ராங்கதன் |
பி. ராஜமாணிக்கம் |
இந்த படத்தில் டி. எஸ். பாலையா, வில்லனாக நடித்தார் அவருக்கு ஜோடியாக பத்மினி இணைந்து நடித்தார் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக வைஜெயந்திமாலா நடித்தார்.
|
63 |
25. சூன் 1960 |
படிக்காத மேதை |
ரங்கன் |
பாலா பிக்சர்ஸ் |
வங்காள படத்தின் தழுவல். அப்பாவியாகவும் வெகுளிதனமாகவும் நடித்தார், முதலில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சரோஜாதேவி அவா்கள் நடிக்க இருந்தது, அவர் கவா்ச்சி நடிகை என்பதல் சௌகார் ஜானகி அவா்கள் முதல் முதலாக சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.
|
64 |
19. அக்டோபர் 1960 |
பாவை விளக்கு |
தணிகாசலம் |
ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ் |
அகிலன் எழுதிய பாவை விளக்கு நாவல் இந்த படத்தில் வரும் (காவியமா ஒவியமா) பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் (ஷாஜகான்) ஆகவும் எம். என். ராஜம் (மும்தாஜ்) ஆகவும் சிறப்பாக நடித்திருந்தனா் இந்த பாடல் காட்சியில் தாஜ்மஹாலை அழகாக படம் பிடித்து காட்டபட்டுள்ளது
|
65 |
19. அக்டோபர் 1960 |
பெற்ற மனம் |
ஈ. வெ. இராமசாமி ஆக நடித்தார் |
நேஷனல் பிக்சர்ஸ் |
முனைவர் மு. வரதராசன் எழுதிய புதினம். இந்த படத்தில் தெலுங்கு நடிகை புஷ்பவல்லி உடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்தார்.
|
66 |
31. திசம்பர் 1960 |
விடிவெள்ளி |
சந்துரு |
பிரபுராம் பிக்சர்ஸ் |
ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் அவா்கள் நடித்த முதல் திரைப்படம்
|
67 |
16. மார்ச் 1961 |
பாவ மன்னிப்பு |
ரஹீம் |
புத்தா பிக்சர்ஸ்/ஏ. வி. எம் |
பஞ்சசீலம் நாடகத்தில் ஜே. பி. சந்திரபாபு அவா்கள் நடித்த நாடகத்தின் தழுவல். இதில் இஸ்லாமிய கதாபத்திரத்தில் சிவாஜி கணேசன் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் தேவிகா உடன் முதல் முதலாக ஜோடியாக இணைந்து நடித்தார்
|
68 |
21. ஏப்ரல் 1961 |
புனர் ஜென்மம் |
சங்கர் |
விஜயா பிலிம்ஸ் |
என். எஸ். கிருஷ்ணன் அவா்களின் தம்பியான என். எஸ். திரவியம் அவா்களுது இயக்கத்திலும் ஸ்ரீதர் அவா்கள் கதை வசனத்திலும் வெளிவந்த திரைப்படம்
|
69 |
27. மே 1961 |
பாசமலர் |
ராஜசேகரன் |
ராஜாமணி பிக்சர்ஸ் |
தனது தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற கம்பெனி தயாரிப்பு. நல்ல அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த நல்ல திரைப்படம்
|
70 |
1. சூலை 1961 |
எல்லாம் உனக்காக |
ஆனந்தன் |
சரவணபவா & யூனிட் பிக்சர்ஸ் |
பாசமலா் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் சாவித்திாியும் அண்ணன் தங்கை ஆக இணைந்து நடித்து பின்பு இந்த படத்தில் ஜோடியாக இணைந்து நடித்ததால் ரசிகர்கள் ஏற்று கொள்ளததால் படம் தொல்வி அடைந்தது.
|
71 |
1. சூலை 1961 |
ஸ்ரீ வள்ளி |
முருகபெருமாள் |
நரசு ஸ்டூடியோஸ் |
*சிவாஜி கணேசன் (முருகன்) வேடத்திலும், *பத்மினி (வள்ளி) வேடத்திலும் *டி . ஆர் . மகாலிங்கம் (நாரதர்) வேடத்திலும் நடித்திருந்தனர் *சிவாஜி கணேசன் நடித்த இரண்டாவது கேவா கலா் திரைப்படமாகும்
|
72 |
24. ஆகத்து 1961 |
மருதநாட்டு வீரன் |
தளபதி ஜீவகன் |
ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவிஸ் |
இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உடன் நடிகர் ஜெய்சங்கர் ஒரு சிறு வேடத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தின் இயக்குநர் டி. ஆர்.ரகுநாத் அவரை நிராகரித்து விட்டார்.
|
73 |
9. செப்டம்பர் 1961 |
பாலும் பழமும் |
டாக்டா். ரவி |
சரவணா பிலிம்ஸ் |
டாக்டா் ரவி ஆக சிவாஜி கணேசனும் நர்ஸ் ஆக சரோஜாதேவியும் அருமையாக நடித்திருந்தனர் இந்த படத்தில் டி.பி.காய்ச்சலை பற்றி சிறப்பாக கூறியிருந்தனர். அதே போல் சிவாஜிக்கு சரோஜாதேவி மனைவியாகவும் தங்கையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார்.
|
74 |
7. நவம்பர் 1961 |
கப்பலோட்டிய தமிழன் |
வ. உ. சிதம்பரம் பிள்ளை |
பத்மினி பிக்சர்ஸ் |
சிறந்த படம், சிறந்த நடிகர் தேர்வு இருந்தும் தோல்வி இந்த படத்தில் சிவாஜி கணேசன் வா. உ. சி ஆக நடிக்கவில்லை வா. உ. சி ஆக வாழ்ந்திருந்தாா் என்று வ. உ. சியின் பேரன் சுப்ரமணியன் கூறியுள்ளாா்.
|
75 |
14. சனவரி 1962 |
பார்த்தால் பசி தீரும் |
பாலு |
ஏவி. எம் புரொடக்ஷன்ஸ் ஜி. கே. புரொடக்ஷன்ஸ் |
இராணுவ வீரா் ஆக சிவாஜி நடித்தாா் போரில் துப்பாக்கி சூட்டால் காலில் குண்டடிபட்டு காலை நொண்டி நடப்பது ரசிகர்களை கண்கலங்க வைத்தாா், சிறுவன் கமல் இருவேடத்தில் நடித்தார். இது சிவாஜி கணேசன் அவா்களின் 75 வது திரைப்படம்
|
76 |
9. பெப்ரவரி 1962 |
நிச்சய தாம்பூலம் |
ரகு / ரகுராமன் |
விக்ரம் புரொடக்ஷன்ஸ் |
நல்ல குடும்ப பாங்கான காதல் கதை இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிகை ஜமுனா உடன் இணைந்து நடித்த கடைசி படம்
|
77 |
30. மார்ச் 1962 |
வளர் பிறை |
கனகு |
பத்மா பிலிம்ஸ் |
இந்த படத்தில் ஊமையாக நடித்திருந்தாராம் சிவாஜி கணேசன் அவா்கள்
|
78 |
14. ஏப்ரல் 1962 |
படித்தால் மட்டும் போதுமா |
கோபால் |
ரங்கநாதன் பிக்சர்ஸ் |
நல்ல அண்ணன் தம்பி சென்டிமென்ட் கொண்ட திரைப்படம் மனப்பெண் மாறுவது கதைகளமாக கொண்டது இதில் சிவாஜிக்கு அண்ணன் கதாபத்திரத்தில் நடிக்க முதலில் ஜெமினி கணேசன் அவா்களை தேர்வு செய்தனர் ஜெமினி சிவாஜி எனக்கு தம்பி நான் அவருக்கு எதிரியாக நடிக்கமாட்டேன் என்று கூற பின்பு ஏ. பீம்சிங் அவா்கள் கே. பாலாஜி அவா்களை சிவாஜிக்கு அண்ணன் ஆக நடிக்க வைத்தார்.
|
79 |
26. மே 1962 |
பலே பாண்டியா |
பாண்டியன் / மருது / சங்கர் (மூன்று வேடம்) |
பத்மினி பிக்சர்ஸ் |
மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். அமெரிக்க அரசின் விருந்தினராக சிவாஜிக்கு அழைப்பு வந்ததால். மிக குறுகியகால தயாரிப்பில். பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம்.
|
80 |
7. சூலை 1962 |
வடிவுக்கு வளைகாப்பு |
விஜயரகுநாத பூபதி |
ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ் |
ஏ. பி. நாகராசன் அவா்களது இயக்கத்தில் சிவாஜி கணேசன் அவா்கள் நடித்த முதல் திரைப்படம்
|
81 |
14. செப்டம்பர் 1962 |
செந்தாமரை |
|
மதராஸ் பிக்சர்ஸ் |
இந்தியாவிலே மிக நீண்ட கால தயாரிப்பில் இருந்த படம் 1953-1962 வரை சுமாா் 9 ஆண்டுகள் பிறகு வெளிவந்த திரைப்படம்.
|
82 |
27. அக்டோபர் 1962 |
பந்த பாசம் |
பாா்த்திபன் |
சாந்தி பிலிம்ஸ் |
சிவாஜி கணேசன் அவா்களின் நாடக சபாவில் பந்தம் பாசம் நாடகத்தின் தழுவல் இந்த பந்தபாசம் திரைப்படம்
|
83 |
23. நவம்பர் 1962 |
ஆலயமணி |
தியாகராஜன் / தியாகு |
பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
எஸ். எஸ். ஆர், சரோஜாதேவியின் முக்கோண காதல் இவா்கள் மீது சந்தேக புத்தியுடன் பாா்க்கும் சிவாஜி கணேசனின் அசத்தலான நடிப்பு. இந்த படத்தில் கை கால் உடைந்த நிலையில் சிவாஜி கணேசன் பாடும் (சட்டி சுட்டதடா) பாடல் இன்றும் ரசிகர்களை ரசிக்க செய்கின்றது. இந்த படத்தில் தான் சிவாஜி கணேசன் ஐ வைத்து கே. சங்கர் அவா்கள் இயக்கிய முதல் திரைப்படம்
|
84 |
9. பெப்ரவரி 1963 |
சித்தூர் ராணி பத்மினி |
தளபதி ராணா ரத்தன் சிங் |
உமா பிக்சர்ஸ் |
ராணி பத்மினியின் கதை சி.எச்.நாராயணமூர்த்தியின் இயக்கத்திலும் வைஜெயந்திமாலா அவா்களுடனும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கடைசி படம்.
பெரிய பொருட்செலவில் படம் எடுத்து பெரிய அளவில் தோல்வியடைந்த திரைப்படம்
|
85 |
1. மார்ச் 1963 |
அறிவாளி |
ஆலவந்தான் |
ஏ. டி. கே. புரொடக்சன்ஸ் |
சிவாஜி கணேசன் உடன் பானுமதி இணைந்து நடித்த கடைசி திரைப்படம் எஸ்.வி.ராமதாஸ் சிவாஜி படத்தில் சேர்ந்து நடித்த முதல் படம் நகைச்சுவை நிறைந்த படம்
|
86 |
29. மார்ச் 1963 |
இருவர் உள்ளம் |
செல்வம்
|
பிரசாத் மூவீஸ் |
கலைஞர் கருணாநிதி வசனமும், கவிஞர் கண்ணதாசன் பாடல்களும் சிவாஜி கணேசன் & சரோஜாதேவி நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்தது. எல். வி. பிரசாத் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த கடைசி திரைப்படமாகும்
|
87 |
12. ஏப்ரல் 1963 |
நான் வணங்கும் தெய்வம் |
சுந்தரம் |
சத்ய நாராயணா பிக்சர்ஸ் |
டி ஆர் ராமச்சந்திரன் டைட்டில் ரோல் சிவாஜி கணேசன் அவா்கள் கே. சோமு இயக்கத்தில் நடித்த கடைசி படம் சிவாஜி கணேசன் உடன் நாகேஷ் அவர்கள் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
|
88 |
7. சூன் 1963 |
குலமகள் ராதை |
சந்திரன்
|
ஸ்பைடர் பிலிம்ஸ் |
அகிலன் நாவல். சிவாஜி கணேசன் உடன் சரோஜாதேவி, தேவிகா இணைந்து நடித்தனர். சிவாஜி படத்தில் ப. கண்ணாம்பாவுடன் இணைந்து நடித்த கடைசி படம்.
|
89 |
12. சூலை 1963 |
பார் மகளே பார் |
ஜமீன்தார் சிவலிங்கம் |
கஸ்தூரி பிலிம்ஸ் |
பெற்றால் தான் பிள்ளையா என்ற நாடகத்தின் தழுவல் இந்த படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி ஆகியோருக்கு மகளாக விஜயகுமாரி, புஷ்பலதா நடித்திருந்தனா். இந்த படத்தில் சோ அறிமுகம் ஆனார்.
|
90 |
12. ஆகத்து 1963 |
குங்குமம் |
சுந்தரம் / காளமேகம் |
ராஜாமணி பிக்சர்ஸ் |
தனது தாயாா் பெயாில் தொடங்கிய பிக்சர்சில் சிவாஜி கணேசன் அவா்கள் தனது முதல் படமான பராசக்தி இயக்குனா் ஆன கிருஷ்ணன்-பஞ்சு அவா்களை வைத்து இயக்க செய்தார் தனது தந்தையயை கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றும் மகனாக பல வேடங்களில் நடித்திருப்பாா். குறிப்பாக பெண் வேடத்தில் நடித்து அசத்திருப்பாா். இந்த படத்தில் தான் ஊா்வசி சாரதா தமிழில் அறிமுகம் ஆனார்
|
91 |
14. செப்டம்பர் 1963 |
இரத்தத் திலகம் |
மேஜர் குமாா் |
நேஷனல் மூவீஸ் |
கண்ணதாசன் தயாரிப்பு. 1962 சீன எல்லைப் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் சிறந்த போர் வீரனாக நடித்ததற்கு சிவாஜி கணேசன் அவா்களுக்கு சீனா அரசாங்கம் ஒரு துப்பாக்கியயை சிவாஜி கணேசனுக்கும், கண்ணதாசனுக்கும் வழங்கி கௌரவித்தது
|
92 |
20. செப்டம்பர் 1963 |
கல்யாணியின் கணவன் |
கதிரேசன் |
பட்சிராஜா ஸ்டூடியோஸ் |
இதில் எம். ஆர். ராதா, வில்லனாக நடித்தாா். இதில் ஒரு காட்சியில் சிவாஜி & சரோஜாதேவி ஐ ஒரு ஷாட்டில் கண்ணத்தில் வேகமாக அடித்து சிவந்து விட்டதாம் சரோஜாதேவிக்கு
|
93 |
15. நவம்பர் 1963 |
அன்னை இல்லம் |
குமாா் / குமரேசன் |
கமலா பிக்சர்ஸ் |
பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் அவா்கள் நடித்த முதல் திரைப்படம்
|
94 |
14. சனவரி 1964 |
கர்ணன் |
கர்ணன் |
பத்மினி பிக்சர்ஸ் |
பாரதத்தில் வரும் கர்ணனையே நமது கண் முன் காட்டி நடித்திருப்பாா் சிவாஜி கணேசன் அவா்கள்.சிவாஜியின் முதல் ஈஸ்ட்மென்ட் கலர் படம்.பெரும் பொருட்செலவு. நல்ல வெற்றி திரைப்படம்.
|
95 |
3. ஏப்ரல் 1964 |
பச்சை விளக்கு |
சாரதி |
வேல் பிக்சர்ஸ் |
இரயில்வே இன்ஜின் டிரைவராகவும், தங்கையயை படிக்க வைக்கும் அண்ணன் ஆகவும் நல்ல குடும்ப தலைவனாகவும் தன் ஆசையயை மறந்து குடும்பத்துக்காகவும் தனது இரயில்வே இலாக்காவுக்காக உயிரையே கொடுக்கும் கதாபாத்திரத்தில் உணர்ச்சி பூர்வமாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் அவர்கள்.
இதில் இரயில் இன்ஜின் ஓட்டும் டிரைவராக பயிற்சி எடுத்து கொண்டு நடித்தாராம்.
|
96 |
12. சூன் 1964 |
ஆண்டவன் கட்டளை |
பேராசிரியர் கிருஷ்ணன் / மூர்த்தி |
பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
பின்னாளில் வந்த சுந்தர காண்டம், சார் ஐ லவ் யூ போன்ற படங்களுக்கு முன்னோடி, நல்ல சென்டிமென்ட் காதல் கதை கொண்ட திரைப்படம்
|
97 |
18. சூலை 1964 |
கை கொடுத்த தெய்வம் |
ரகு |
ஸ்ரீ பொன்னி புரொடக்சன்ஸ் |
பாரதியார் வேடத்தில் ஒரு பாடலில் அருமையாக நடித்திருப்பார். இந்த படத்தில் முதலில் இந்தி பேசி நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை தேவிகா அவா்கள் ஒப்பந்தம் செய்யபட்டாா் பின்பு அவருக்கு இந்தி பேச வராத காரணத்தால் அவருக்கு பதிலாக கே. ஆர். விஜயா அவா்கள் எஸ். எஸ். ராஜேந்திரன் அவா்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்தார். இந்த படத்தில் தான் சிவாஜி கணேசன் உடன் கே. ஆர். விஜயா முதல் முதலாக சிவாஜிக்கு தங்கை வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் தான் சிவாஜிகணேசன் ஐ வைத்து கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அவா்கள் இயக்கிய முதல் திரைப்படம்
|
98 |
12. செப்டம்பர் 1964 |
புதிய பறவை |
கோபால் |
சிவாஜி பிலிம்ஸ் |
சூப்பர் ஹீட் திகில் சம்பவம் நிரைந்த திரைப்படம். இந்த படத்தில் சரோஜாதேவி அவா்கள் சிவாஜியயை கோபால் கோபால் என்று அழைப்பது. இன்றும் தமிழ் ரசிகர்கள் சரோஜாதேவி ஐ கொண்டாடுகின்றனர். தமிழில் முதல் சஸ்பன்ஸ் நிறைந்த திரைப்படம். சிவாஜி பிலிம்சின் முதல் தமிழ்த் திரைப்படம். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் ரசித்து கெட்க படுகின்றது. ஆங்கில படங்களுக்கு இணையாக காட்சிகள். லைட்டிங் கேமிரா கோணம் அதிகமான மியூசிக் எக்கியூப்மென்ட்ஸ் கொண்ட பாடல்கள் காஸ்ட்யூம்ஸ்கள் அப்பப்பா, இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
|
99 |
3. நவம்பர் 1964 |
முரடன் முத்து |
காளிமுத்து / முத்து |
பத்மினி பிக்சர்ஸ் |
பி. ஆர். பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த கடைசிப் படம்
|
100 |
3. நவம்பர் 1964 |
நவராத்திரி |
9 வேடங்களில் நடித்தார் |
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
சிவாஜி கணேசன் அவா்களின் 100 ஆவது திரைப்படம். இதில் 9 விதமான நவரசங்களிலும் அருமையாக சிவாஜி கணேசன் நடித்திருப்பாா்.
|
101 |
14. சனவரி 1965 |
பழநி |
பழநி |
பாரதமாதா பிக்சர்ஸ் |
கிரமத்தில் வாழும் அப்பாவி அண்ணனாக சிவாஜி கணேசன் அவா்கள் நடித்தார் இதில் கதாநாயகன் சிவாஜிக்கு ஜோடியாகயாரும் நடிக்கவில்லை.
|
102 |
19. பெப்ரவரி 1965 |
அன்புக்கரங்கள் |
சிவராமன் |
சாந்தி பிலிம்ஸ் |
இந்த படத்தில் ஸ்டேசன் மாஸ்டர் ஆக சிவாஜி கணேசன் அவா்கள் நடித்திருப்பாா். இது சிவாஜி கணேசன் தனது மகள் பெயாில் தொடங்கிய சாந்தி பிலிம்சின் முதல் படமாக வெளியிட்டாா். இந்த படத்தில் வாலி அவா்கள் சிவாஜி படத்திற்கு முதல் முதலாக அனைத்து பாடல்களும் எழுதினார்.
|
103 |
22. ஏப்ரல் 1965 |
சாந்தி |
சந்தானம் |
ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் |
நல்ல கதைகளம் இந்த படத்தில் வரும் (யார் அந்த நிலவு) பாடல் காட்சியில் சிவாஜி நடிக்க நாள் ஆகி கொண்டு இருந்தது இயக்குனா் ஏ. பீம்சிங் அவா்கள் சிவாஜி இடம் வெறு நடிகரை வைத்து இந்த பாடலை எடுக்கட்டுமா என்று கெட்க உடனே சிவாஜி அந்த பாடலை ரெக்கார்டில் கெட்க நாயா் (எம். எஸ். விஸ்வநாதன்) நல்ல மியூசிக் போட்ருகார், செட்டியார் (கண்ணதாசன்) அருமையாக பாடலை எழுதியுள்ளார், அய்யர் (டி. எம். சௌந்தரராஜன்) அழகாக பாடியுள்ளார், இதில் நான் மட்டும் என் திறமையயை காட்டி பாடலில் அருமையாக நடிப்பென் என்று கூறி அழகாக சிகரட் ஊதி நடித்திருப்பார் சிவாஜி கணேசன். மேலும் இந்த படத்தில் சிவாஜிகணேசனுக்கும் எம். ஆர். இராதாக்கும் புதிய பறவை திரைப்படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருவருமே பிரிந்தனர்.
|
104 |
31. சூலை 1965 |
திருவிளையாடல் |
சிவபெருமாளின் பல்வேறு வேடங்களில் நடித்தார் |
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
சிவலீலை என்ற கதையில் தொகுத்து எழுதிய கதையே திருவிளையாடல் இந்த படத்தில் தான் மக்கள் இறைவன் சிவபெருமாளை நமது சிவாஜி உருவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.
|
105 |
10. திசம்பர் 1965 |
நீலவானம் |
பாபு
|
பட்டு பிலிம்ஸ் |
இந்த படத்தில் தான் முதல் முதலாக சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதினார் கே. பாலசந்தர் அவர்கள்.
|
106 |
26. சனவரி 1966 |
மோட்டார் சுந்தரம் பிள்ளை |
சுந்தரம் பிள்ளை |
ஜெமினி ஸ்டூடியோஸ் |
இந்தி படத்தின் தழுவல் இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவா்கள் தனது 38 வயதிலும் 60 வயது முதியவராக சிறப்பாக நடித்ததர்க்கு டில்லியில் ஜனாதிபதி அவர்களிடம் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றாா். மேலும் இந்த படத்தில் தான் பல நடிகைகளான காஞ்சனா, ஜெயலலிதா, ஆகியோர் மகளாக நடித்தனர் மேஜர் சுந்தரராஜன், ரவிச்சந்திரன்,சிவகுமார், ஆகியோர் முதல் முதலாக சிவாஜி உடன் இணைந்து நடித்தனர். இதில் சிவாஜி கணேசன் அவா்கள் இரண்டு மனைவிகளுக்கு கணவராகவும் 10 பிள்ளைகளுக்கு தந்தை ஆகவும் நடித்தார்.
|
107 |
19. ஆகத்து 1966 |
மகாகவி காளிதாஸ் |
காளிதாசர் /சின்னையா |
கல்பனா கலா மந்திர் |
முதலில் ஆடு மெய்க்கும் ஆயர் பாமரன் சின்னையாவாகவும் பின்பு காளிதேவியின் அருள் பெற்று கவிஞனாகும் மகாகவி காளிதாசனின் கதாபாத்திரத்தில் அருமையாக ஆக நடித்திருந்தார்
|
108 |
3. செப்டம்பர் 1966 |
சரஸ்வதி சபதம் |
நாரதர் முனிவர் / வித்யாபதி |
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
சரஸ்வதிதேவியின் பக்தனாகவும் வாய்பேச முடியாத ஊமை வித்யாபதி ஆகவும், நாரதா் மாமுனிவராக அருமையாக நடித்திருந்தார்.
|
109 |
11. நவம்பர் 1966 |
செல்வம் |
செல்வம் |
வி. கே. ஆர். பிக்சர்ஸ் |
நல்ல திரைக்கதை பொய்யான ஜோதிடத்தால் ஏற்படும் விளைவுகளாள் பிாியும் ஜோடிகளின் கதை இந்த படம் 1966 ஆம் ஆண்டுகான ரசிகர்கள் விரும்பி பாா்த்த திரைப்படம்
|
110 |
14. சனவரி 1967 |
கந்தன் கருணை |
வீரபாகு |
ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் |
இந்த படத்தில் முருகனாக நடித்த சிவகுமார் அவா்கள் தானாக பாடுவதாக ஒரு பாடல் கூட கிடையாது ஆனால் இந்த படத்தின் இறுதி பாடலாகவரும் வெற்றிவேல் வீீரவேல் என்ற பாடலை பாடி கொண்டு வரும் சிவாஜி கணேசன் அவா்கள் போர்களத்தில் அழகாக நடந்துவரும் நடையயை கண்டு ரசிகர்கள் ரசித்து பாா்த்ததனர். வீரபாகுவாக நடித்தும் வசனம் பேசியும் அசத்தினாா்.
|
111 |
2. மார்ச் 1967 |
நெஞ்சிருக்கும் வரை |
ரகு / ரகுராமன் |
சித்ராலயா |
இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் மேக்கப் இல்லாமல் நடித்தனர். வாழ்க்கைகாக தனது காதலையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் வேலையில்லாத யாரும்மில்லாத அனாதை நண்பர்கள் கதையில் சிவாஜி கணேசன், முத்துராமன், வி. கோபால கிருஷ்ணன் மூவரும் அருமையாக நடித்திருந்தனர்.
|
112 |
14. ஏப்ரல் 1967 |
பேசும் தெய்வம் |
சந்துரு
|
ரவி புரொடக்சன்ஸ் |
நல்ல காதல் மற்றும் வாழ்க்கை சித்திரம் இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு காட்சியில் எமோசனாக நடிக்க வரவில்லையாம் இந்த படத்தின் இயக்குனா் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அந்த காட்சியில் எமோசனாக சிவாஜிக்கு நடித்து காட்டினாராம் இந்த காட்சியயை இரவு முழவதும் வீட்டில் நடித்து விட்டு மறுநாள் அருமையாக ஷெட்டில் வந்து அருமையாக நடித்தாராம் சிவாஜி கணேசன் அவா்கள். மேலும் ஒரு காட்சி திருப்பதி தேவஸ்த்தானத்தில் படம் ஆக்கபட்டபோது அந்த காட்சியில் நடித்த சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.வி.ரங்காராவ் ஆகிய மூவரையும் வைத்து காட்சி படமாக்க பட்டபோது ஒவ்வொறு ஷாட்டிலும் எஸ்.வி.ரங்காராவையும், பத்மினியயை பாராட்டினார் இயக்குநர் கே.எஸ்.ஜி ஆனால் அந்த ஷாட்டில் கடைசி வரை சிவாஜி ஐ பாராட்டவில்லை இதை கண்ட சிவாஜி கணேசன் கோபமாக இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனை டெய் கோனா.கினா என் நடிப்பை பாராட்ட மாட்டியாட என கெட்டார் அதற்கு கே.எஸ்.ஜி அண்ணே உங்கள் நடிப்பை நான் பாராட்டுவதா உங்கள் நடிப்பை ஊர் உலகமே பாராட்டி உங்களுக்கு நடிகர் திலகம் என்ற பெயரே உங்களுக்கு கொடுத்துருக்காங்க அப்படி இருக்கும் போது நான் என்ன பாராட்ட இருக்கு என்று கூறியவுடன் சிவாஜி கணேசன், கே. எஸ். கோபாலகிருஷ்ணனை கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார் இந்த நிகழ்வு நடந்த இடம் திருப்பதி தேவஸ்த்தானம் என்பது அன்றை செய்தி தாளில் வெளிவந்தது.
|
113 |
19. மே 1967 |
தங்கை |
மதன் / மதனகோபால் |
சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
கே. பாலாஜி தயாரிப்பிலும் ஏ. சி. திருலோகச்சந்தர் அவா்களின் இயக்கத்திலும் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்
|
114 |
16. சூன் 1967 |
பாலாடை |
சேகர்
|
கமலா பிக்சர்ஸ் |
இந்த படத்தில் குழந்தை இல்லாமையயை பற்றி சிறப்பாக கூறியிருந்தனர்
|
115 |
28. சூலை 1967 |
திருவருட்செல்வர் |
சேக்கிழார் நாயினாா் , திருகுறிப்புதொண்டர் நாயினாா்,சுந்தரமூர்த்தி நாயினாா், திருநாவுகரசா் நாயினாா்/ (அப்பர்), மற்றும் அனைத்து சிவனடிகளாா் ஆகவும் நடித்துள்ளார்,
|
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
இந்த படத்தில் பல்வேறு சிவபெருமாளின் தொண்டர்கள் ஆன 63 நாயன்மாா்களின் கதையயை கூறும் வேடத்தில் சிவாஜிகணேசன் அருமையாக நடித்திருப்பாா், மேலும் இந்த படத்தை சிவாஜி கணேசன் தாயாா் ராஜாமணி அம்மாள் அப்பர் வேடத்தில் முதியவராக சிவாஜி நடித்ததை கண்டு மனம் நொந்து கண் கலங்கினாராம்
|
116 |
1. நவம்பர் 1967 |
இரு மலர்கள் |
சுந்தர் |
மணிஜி சினி புரொடக்சன்ஸ் |
நல்ல முக்கோண காதல் கதை ஒரு பெண்ணை காதலித்து விட்டு மற்றோரு பெண்ணை சந்தர்ப்ப வசத்தால் கல்யாணம் செய்துகொள்ளும் கதைகளம். அன்றைய தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம்
|
117 |
1. நவம்பர் 1967 |
ஊட்டி வரை உறவு |
ரவி |
கேசீ பிலிம்ஸ் |
ஊட்டியயை அழகாக படம் பிடித்துகாட்டபட்டுள்ளது அழகான நகைச்சுவை மிக்க காதல் கதை முதலில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா வை நடிக்க வைக்க இருந்த போதும் படத்தில் சிவாஜியயை விட ஜெயலலிதா மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததால் மெக்கப் டெஸ்டில் அவரை ஸ்ரீதர் நிராகரித்து விட்டு கே. ஆர். விஜயா அவர்களை ஒப்பந்தம் செய்து சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அன்றைய தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம்
|
118 |
16. பெப்ரவரி 1968 |
திருமால் பெருமை |
பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்/ (விப்ரநாராயணா்) திருமங்கை ஆழ்வார் |
திருவேங்கடேசா மூவீஸ் |
திருமாலின் பெருமையயையும் பெருமாளின் அவதாரங்களின் மகிமைகளை கூறிய திரைப்படம் இதில் சிவாஜி கணேசன் பெரியாழ்வார் ஆகவும் அவரது மகளாக கே. ஆர். விஜயா, ஆண்டாள் ஆகவும் நடித்ததை கண்டு ரசிகர்கள் ஏற்று கொள்ளாவிட்டாலும் அந்த கதைக்கு மதிப்பளித்து ரசிகர்கள் ஏற்று கொண்டனர் மேலும் திருமங்கை ஆழ்வாா் முதலில் திருடன் ஆக வேடுபறி நடத்தும் குலசேகரன் ஆழ்வார் வேடத்தில் சிவாஜிகணேசன் அருமையாக நடித்திருப்பாா்
|
119 |
11. ஏப்ரல் 1968 |
ஹரிச்சந்திரா |
ஹரிசந்திரன் மகாராஜா |
பிரமோதா பிலிம்ஸ் |
இந்த படத்தில் ஹரிசந்திர மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஹரிசந்திர வேடத்தில் சிவாஜிகணேசன் மற்றும் சந்திரமதி வேடத்தில் ஜி. வரலட்சுமியும் அருமையாக நடித்திருந்தார்
|
120 |
12. ஏப்ரல் 1968 |
கலாட்டா கல்யாணம் |
மதன் |
ராம்குமார் பிலிம்ஸ் |
நல்ல நகைச்சுவை கலந்த காதல் கதை கொண்ட திரைப்படம், இந்த படத்தில் ஜெ. ஜெயலலிதா உடன் சிவாஜிகணேசன் முதல் முதலில் இணைந்து நடித்தார், இந்த படத்தை சிவாஜிகணேசனை வைத்து சி. வி. ராஜேந்திரன் முதல் முதலாக இயக்கினார். முதலில் கலாட்டா கல்யாணம் கலைநிகழ்ச்சியில் நாடகம் ஆக போட்டனர், அதில் சிவாஜிக்கு ஜோடியாக காஞ்சனா, நடித்திருந்தார், முத்துராமன் வேடத்தில் வி. கோபால கிருஷ்ணன் படத்தில் நடித்தார்.
|
121 |
7. சூன் 1968 |
என் தம்பி |
கண்ணன் / சின்னையா |
சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இந்த படத்தில் தெருகூத்து நடிகராக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பாா், இந்த படத்தில் இறுதியில் வரும் (தட்டட்டும் கை தழுவட்டும்) பாடலில் சிவாஜிகணேசன் சரோஜாதேவி ஐ சாட்டையால் அடித்து அட வைக்கும் காட்சி அழகாக படம் பிடிக்கபட்ட விதமானது ரசிகர்களை கவர்ந்தது
|
122 |
27. சூலை 1968 |
தில்லானா மோகனாம்பாள் |
சிக்கல் "நாதஸ்வர சக்கரவா்த்தி" சண்முகசுந்தரம் |
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
இந்த படத்தில் நடிப்பு சக்கரவா்த்தி ஆன சிவாஜி கணேசன் நாதஸ்வர சக்கரவா்த்தி சண்முகசுந்தரம் ஆக மாறி நடித்தார், இந்த படத்தில் இசையா, நாட்டியமா என்ற போட்டியில் சிவாஜி கணேசன் பத்மினி இருவரும் போட்டி போட்டு நடித்தனர், 1958ல் விகடனில் தொடராக கொத்தமங்கலம்சுப்பு எழுதியநாவல். 10 வருடம் கழித்து படமாக ஆக்கபட்டு பெரிய வெற்றி கண்டது. மேலும் சிவாஜி கணேசன் இதில் நாதஸ்வர வித்வானாக நடிக்க பல நாதஸ்வர கலைஞர்களிடம் பயிற்ச்சி எடுத்து கொள்ளும் போது தனது நண்பரும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மடியில் அழகாக படுத்து கொண்டு அந்த நாதஸ்வர இசையயை ரசித்து கெட்டு கொண்டு இருந்ததாராம் சிவாஜி கணேசன் அவர்கள்
|
123 |
21. அக்டோபர் 1968 |
எங்க ஊர் ராஜா |
சேதுபதி / பூபதி (இரு வேடம்)
|
அருண் பிரசாத் மூவீஸ் |
இந்த படத்தில் இரு வேடத்தில் சிவாஜி கணேசன் தந்தை மகனாக நடித்தார் இந்த படத்தில் வரும் (யாரை நம்பி நான் பிறந்தேன்) என்ற பாடல் மிகவும் ஹீட் பாடலாகும்
|
124 |
15. நவம்பர் 1968 |
லட்சுமி கல்யாணம் |
கதிா்வேல் |
கிருஷ்ணாலயா |
இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக இணைந்து யாரும் நடிக்கவில்லை, இதில் வெண்ணிற ஆடை நிர்மலா அவா்கள் சிவாஜி படத்தில் முதல் முறையாக நடித்தார்.
|
125 |
29. நவம்பர் 1968 |
உயர்ந்த மனிதன் |
ராஜலிங்கம்/ராஜு |
ஏவி. எம். புரொடக்சன்ஸ் |
125 ஆவது திரைப்படம் சூப்பர் சென்டிமென்ட் திரைப்படம், இதில் சிவாஜிகணேசன் உடன் வாணிஸ்ரீ, பாரதி ஆகியோர் முதல் முதலாக இணைந்து நடித்திருந்தனர், இந்த படத்தின் கதையில் முதலில் எஸ். ஏ. அசோகன், அவா்கள் நடித்த டாக்டா் கோபால் வேடத்தில் சிவாஜிகணேசன் நடிக்க ஆசைபட்டார் பின்பு ஏ. வி. மெய்யப்பன் செட்டியார் அவா்களின் வேண்டுகோளை ஏற்று கதாநாயாகனாக நடித்தார். இந்த படத்தில் வரும் (அந்த நாள் ஞாபகம்) என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் ரசித்து கெட்கின்றனர்
|
126 |
1. சனவரி 1969 |
அன்பளிப்பு |
வேலு
|
கமலா மூவீஸ் |
இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர், விஜய நிர்மலா உடன் இணைந்து முதல் முறையாக நடித்தார்.
|
127 |
28. மார்ச் 1969 |
தங்கச் சுரங்கம் |
ராஜன் சி.பி.ஐ அபீசர் |
ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் |
இந்த படத்தில் ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார், இந்த படத்தில் சிவாஜி சி. பி. ஐ போலீஸ் அதிகாரியாக அருமையாக நடித்திருந்தார் இதில் முதலில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி அவா்கள் நடித்தார் பின்பு அவர் நீச்சல் உடையில் நடிக்காததால் அவருக்கு பதிலாக பாரதி அவா்கள் இணைந்து நடித்தார்.
|
128 |
1. மே 1969 |
காவல் தெய்வம் |
சாமுண்டி |
அம்பாள் புரொடக்சன்ஸ் |
ஜெயகாந்தனின் கைவிலங்கு நாவல், இதில் மரமேரி சாமுண்டி ஆக சிவாஜிகணேசன் அவா்கள் தனது சிம்மகுரலால் வசனம் பேசி அருமையாக நடித்திருப்பார். கே. விசயன் இயக்கத்திலும் நடிகை லட்சுமி உடனும் சிவாஜிகணேசன் நடித்த முதல் திரைப்படம், மற்றும் நடிகர் அசோகன் சிவாஜி உடன் இணைந்து நடித்த கடைசி திரைப்படம்
|
129 |
14. சூன் 1969 |
குருதட்சணை |
கண்ணன் |
ஸ்ரீ கஜலட்சுமி பிலிம்ஸ் |
ஒரு படிக்காத பாமரனாக சிவாஜி கணேசன் அருமையாக நடித்திருப்பார்
|
130 |
27. சூன் 1969 |
அஞ்சல் பெட்டி 520 |
பிரபு
|
பாரத் மூவீஸ் |
க்ரைமிங் ரிப்போர்ட் என்ற நாவலின் தழுவல் இந்த படத்தில் தான் சிவாஜிகணேசன் உடன் தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஆகியோர் முதல் முதலாக இணைந்து நடித்திருந்தனர், இந்த படத்தை டி. என். பாலு இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த ஒரே படம்
|
131 |
8. செப்டம்பர் 1969 |
நிறைகுடம் |
பிரபாகர் / பாபு |
முக்தா பிலிம்ஸ் |
முக்தா ஶ்ரீனிவாசன் அவா்கள் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த முதல் திரைப்படம்
|
132 |
5. செப்டம்பர் 1969 |
தெய்வமகன் |
சங்கர் / கண்ணன் / விஜய் (மூன்று வேடம்) |
சாந்தி பிலிம்ஸ் |
*ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம் *சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு அரசு திரைப்பட விருது அளித்து சிவாஜி கணேசனை கௌரவித்தது *இரண்டாவது தடவை மூன்று வேடங்களில் நடித்தார்.
|
133 |
10. அக்டோபர் 1969 |
திருடன் |
ராஜு
|
சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இந்த படத்தில் சிவாஜிகணேசன் அவா்கள் ஒரு அசல் திருடன் ஆக நடித்திருப்பார் இதில் ஹேர் ஸ்டைலிங் மேக்கப் கேட்டப்பில் நடித்து அசத்திருப்பார்.
|
134 |
10. நவம்பர் 1969 |
சிவந்த மண் |
பாரத் / (மாஷின்ஷா அரேபியா கெட்டப்ரோல்) |
சித்ராலயா |
இந்த திரைப்படத்தில் முதல் முதலாக வெளிநாட்டில் சென்று எடுக்கபட்ட முதல் தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜிகணேசன் அவா்கள் (பட்டத்து ராணி) என்ற பாடலில் அரேபியா ஷேக் வேடத்தில் நடித்து காஞ்சனா வை சாட்டையால் அடித்து அட வைக்கும் காட்சி தத்ருமாக படம் பிடிக்கபட்டுள்ளது.
|