உருசிய ஊரால் நடுவண் மாவட்டம்
ஊரால் நடுவண் மாவட்டம் மாவட்டம் (Ural Federal District, உருசியம்: Ура́льский федера́льный о́круг, Uralsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 12,080,523 (79.9% நகர்ப்புறம்). இந்த மாவட்டம் 13 மே 2000 அன்று உருசிய சனாதிபதியின் ஆணைப்படி நிறுவப்பட்டது.[4] இது உருசியாவின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது.[5] மாவட்டத்தின் நிர்வாக மையம் எக்கத்தரீன்பூர்க் நகரம் ஆகும். உருசியாவின் மொத்த பிராந்திய உற்பத்தியில் (ஜிஆர்பி) இந்த மாவட்டம் 18% கொண்டுள்ளது. ஆனால் இதன் மக்கள் தொகை உருசிய மக்கள் தொகையில் 8.5% மட்டுமே ஆகும்.[6] பொதுவான தகவல் மற்றும் புள்ளிவிவரங்கள்இந்த மாவட்டம் 1,818,500 சதுர கிலோமீட்டர்கள் (702,100 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உருசியாவில் சுமார் 10% ஆகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு, மாவட்டத்தின் மக்கள் தொகை 12.080.526 ஆகும் இவர்களில் 82,74% உருசியர்கள் (10,237,992 பேர்), 5.14% தாதர்கள் (636,454), 2.87% உக்ரைனியர்கள் (355,087), 2.15% பாஷ்கிர்கள் (265,586) ஆவர். மீதமுள்ளவர்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களாவர். மாவட்ட மக்கள் தொகையில் 79.9% நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில், இந்த மாவட்டமானது உருசியாவில் உற்பத்தியாகும் கனிமப்பொருட்களில் 90% இயற்கை எரிவளி உற்பத்தியையும், 68% எண்ணெயும், 42% உலோக பொருட்களையும் நிறைவு செய்தது. மாவட்டத்தில் தனிநபர் உற்பத்தியானது உருசியா முழுவதுக்குமான சராசரி மதிப்பை விட 2.5 மடங்கு அதிகமாகும். இந்த மாவட்டம் உருசிய வரி வருவாயில் சுமார் 42% வழங்குகிறது. இங்கு வருவாய் தரக்கூடிய தொழில்துறையிலில் பெரும்பாலும் எரிபொருள் அகழ்வு மற்றும் உற்பத்தி (53%), உலோகம் (24%) மற்றும் உலோக செயலாக்கம் மற்றும் பொறியியல் (8.8%) ஆகியவை முக்கிய பிரிவுகள் ஆகும். பிந்தைய இரண்டும் குறிப்பாக செல்யாபின்சுக் மாகாணம் மற்றும் சிவெர்த்லோவ்சுக் மாகாணம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை உருசிய உலோகவியலில் 83% மற்றும் உலோக செயலாக்கம் மற்றும் பொறியியலில் 73% ஆகும். 1990 மற்றும் 2006 க்கு இடையில் எரிபொருள் மற்றும் கனிம சுரங்கங்கள் கிட்டத்தட்ட நிலையான உற்பத்தியைக் கொண்டிருந்தாலும், உலோக செயலாக்கம் மற்றும் பொறியியல் துறை குன்றி வருகின்றது. இருப்பினும் மாவட்டத்தில் 30% பேர் தொழில்துறையில் தொழிலாளர்களர்களாக வேலை செய்கின்றனர். உள்ளூர் தாது செயலாக்க ஆலைகளுக்கு தேவையான செம்பில் 20%, குரோமியம் 28%, இரும்பு 35%, நிலக்கரியில் 17% மட்டுமே உள்ளூரில் கிடைக்ககூடியதாக உள்ளது. மேலும் இந்த வளங்களில் பல கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. இந்த மூலப் பொருட்களை யூரலுக்கு இறக்குமதி செய்வதற்கான சராசரி தொலைவு 2,500 கி.மீ. ஆகும் [7] மாவட்டத்தை ஜனாதிபதி தூதர் நிர்வகிக்கிறார், மேலும் தனிப்பட்ட தூதர்கள் உருசியாவின் ஜனாதிபதியால் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மகாணங்களுக்கும் நியமிக்கப்படுகிறார்கள். 2, திசம்பர் 2008 அன்று பியோட்ர் லாடிஷேவ் இறக்கும் வரை அவரே ஊரல் நடுவண் மாவட்டத்தின் தூதராக இருந்தார். நிகோலே வின்னிச்சென்கோ 8 டிசம்பர் 2008 அன்று இந்த பதவியில் அவருக்குப் பின் பொறுப்புக்கு வந்தார்.[8] 6, செப்டம்பர் 2011 அன்று, வின்னிச்சென்கோ வடமேற்கு நடுவண் மாவட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டார். மேலும் யெவ்கேனி குயாவேஷேவ் ஊரல்ஸ் நடுவண் மாவட்டத்தில் ஜனாதிபதி தூதராக ஆனார்.[9] மே 18, 2012 அன்று விளாதிமிர் பூட்டின் இந்த பதவியை போதிய அரசியல் அனுபவம் இல்லாத பொறியாளரான இகோர் கோல்மான்ஸ்கிக்கிற்கு வழங்கினார். கோல்மான்ஸ்கிக்கும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 26 ஜூன் 2018 அன்று, கோல்மான்ஸ்கிக்கிற்கு பதிலாக நிகோலே சுகானோவ் நியமிக்கப்பட்டார்.[10] கூட்டமைப்பு நிர்வாகப் பிரிவுகள்மாவட்டத்தில் மத்திய (பகுதி) மற்றும் மேற்கு சைபீரிய பொருளாதார பகுதிகள் மற்றும் ஆறு கூட்டாட்சி அமைப்புகள் உள்ளன :
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia