உலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[7]
ஓப்லாசுதுவின் பரப்பளவில் கால்பங்கு நிலப்பகுதியில் இலையுதிர் காடுகள் உள்ளன ஒப்லாசுதுவின் மையத்தில் வோல்கா ஆறு பாய்ந்து இரண்டாக பிரிக்கிறது. பிராந்தியத்தின் மேற்குப் பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு 358 மீ (1,175 அடி) உயரமான மலைகள் காணப்படுகின்றன. ஒப்லாசுதுவின் கிழக்கு பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது. நீர்நிலைகள் பிரதேசத்தில் சுமார் 6% பரப்பளவில் உள்ளன.
சூலைமாத சராசரி வெப்ப நிலை +19 °செ (66°பாரங்கீட்). சனவரி மாத சராசரி வெப்பநிலை −11 °செ (12°பாரங்கீட்) பனிப்பொழிவு நவம்பர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கம்வரை பொழிகிறது. ஆண்டு சராசரி மழையளவு 400 மிமீ (16 அங்குளம்).
மக்கள் வகைப்பாடு
ஓப்லாசுது மக்கள் தொகை: 1,292,799 ( 2010 கணக்கெடுப்பு ); 1,382,811 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,400,806 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).
ஒப்லாசுது மக்களில் 55% மேலான மக்கள் உலியானவ்ஸ்க், திமிட்ரோவிகார்ட் ஆகிய இரு நகரங்களில் வாழுகின்றனர்.
இனக்குழுவினர் பின்வரும் விகிதப்படி வாழ்கின்றனர்.[7]
73,6% உருசியர்
12.2% டாடர்
7.7% சுவாஷ்
3.2% மால்தோவியர்
3.3% மற்றவர்கள்
67.890 மக்கள் தங்கள் இனம் பற்றி அறிவிக்கவில்லை.[12]
2007 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிறப்பு விகிதம் 1000 க்கு 9.0 என்று இருந்தது இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1991 ஆண்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 200 ஆயிரம் பேர்வரை குறைந்துள்ளனர்.
9.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் மதத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.[14]
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).