பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு)[8] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.
புவியியல்
முதன்மை ஆறுகள்
பென்சா மாகாணத்தில் சுமார் 3000 ஆறுகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 15,458 கி.மீ ஆகும். இதில் கீழ்கண்டவை பெரிய ஆறுகள்:
சுரா ஆறு
மோக்சா ஆறு
கபியோர் அல்லது ஹஃப்யோர் ஆறு
பென்சா ஆறு. இந்த ஆற்றின் பெயராலேயே பென்சா நகரம் அமைந்துள்ளது.
விலங்குகள்
இந்த பிராந்தியத்தில் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் 316 வகையான இனங்கள் உள்ளன. இதில்
நீர்நில வாழ்வன சுமார் பத்து இனங்கள்
பறவைகள் 200 இனங்கள்
ஊர்வன சுமார் எட்டு இனங்கள்
பாலூட்டிகள் 68 இனங்கள்
நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 50 மீன் இனங்கள் உள்ளன.
பொருளாதாரம்
பென்சா மாகாணம் வோல்கா பொருளாதாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உருசியாவின் முன்னணி தயாரிப்புகளான கோதுமை, கம்பு, ஓட்ஸ், தினை ஆகிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கடுகு, மற்றும் இறைச்சி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.[13]
மக்கள் வகைப்பாடு
மாகாண மக்கள் தொகை: 1,386,186 (2010 கணக்கெடுப்பு); 1,452,941 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 1,504,309 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
43,283 பேர் கணக்கெடுப்பில் தங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[8][17]
சமயம்
2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[18] இந்த மாகாண மக்கள்தொகையில் 42.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 7% முஸ்லீம்கள், 15% சமயநாட்டமற்ற ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், 9% நாத்திகர்கள், 3.1% மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[18]
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).