நோவ்கோரத் மாகாணம் (Novgorod Oblast, உருசியம்: Новгоро́дская о́бласть, நோவ்கோரத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் விலீக்கி நோவ்கோரத் நகரம். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 634,111 ஆகும்.[9]
புவியியல்
நோவ்கோரத் ஒப்லாஸ்துவின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கில் லெனின்கிராடு ஓப்லசுது, கிழக்கில் வோலோக்தா ஒப்லாசுது, தெற்கு மற்றும் தென்கிழக்கில் துவர்ஸ்கயா ஒப்லாசுது, தென்மேற்கில் பிஸ்கோவ் ஒப்லாசுது ஆகியவை உள்ளன.
மாநிலத்தின் மேற்கு பகுதியைச் சுற்றி தாழ்நில ஏரி சூழ்ந்தும், கிழக்கு பகுதி மேட்டுப்பாங்கானதாக உள்ளது. பிராந்தியத்தின் மிக உயர்ந்த இடம் ரைசூகா வால்டாய் மலை (296 மீட்டர் (971 அடி)) ஆகும். ஒப்ளாசுதுவின் மையத்தில் உள்ள லமின் ஏரி மத்திய உருசியாவில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.
பொருளாதாரம்
தொழில்
2014 ஆண்டைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% தொழில்துறை பூர்த்திசெய்தது. இந்த ஒப்ளாசுதுவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்களான நான்கு இரசாயன ஆலைகள், வெலிகை நாவ்கராட்டில் அமைந்துள்ளது. மேலும் நிசினி நோவகோர்ட்டில் உள்ள உரம், உலோக ஆலை சிறப்பானது.
வேளாண்மை
இந்த ஒப்ளாசுதுவின் வேளாண் சார்ந்த தொழிலாக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு உள்ளது. 2011 இல் 90% பண்ணைகளில் கால்நடைவளர்ப்பு பிரதானமாக இருந்ததது மேலும் இதில் 79% பண்ணைகளில் இறைச்சி, பால், முட்டை உற்பத்தியில் ஈடுபட்டன. பெரிய பண்ணைகள் பல பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றிலும், பயிர் வளர்ப்பு, உருளைக்கிழங்கு உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.
மக்கள் வகைப்பாடு
ஒப்லாசுதுவின் மக்கள் தொகை: 634,111 (2010 கணக்கெடுப்பு ),[9] 2002 ஆண்டைய மக்கள் தொகையான 694.355ஐ விட குறைவு.[13].
இந்த ஒப்லாசுதுவின் மக்கள் அடர்த்தி என்பது ஐரோப்பிய உருசியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். காரணம் யாதெனில் இரண்டாம் உலகப் போரின்போது இப்பகுதி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டதாகும். மக்கள் தொகையில் 70.6% பேர் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர்.[9]
இனக் குழுக்கள்: ஒப்லாஸ்து 2010 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையில் 560.280பேர் உருசுயர்கள் (95.1%), 7.025 உக்ரைனியர்கள் (1.2%), 3,438 பெலாரஷ்யர்கள் (0.6%), 3.598 ரோமா மக்கள் (0.6%), இதர இனத்தவர்கள் 15.054 பேர் [7] மக்கள் தொகையில் 44.716 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]
2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[17] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 46,8% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 4% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% முஸ்லிம்கள்,. மக்கள் தொகையில் 34% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 10% நாத்திகர், 3.9% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.
மேற்கோள்கள்
↑Article 8 of the Charter of Novgorod Oblast provides that the oblast may have its own coat of arms and other symbols if an appropriate oblast law is adopted. As of 2014, no such law has been adopted with regards to an anthem.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).