கபரோவ்ஸ்க் பிரதேசம்
கபரேவ்ஸ்க் பிரதேசம் (Khabarovsk Krai (உருசியம்: Хаба́ровский край , tr. Khabarovsky kray; IPA: [xɐˈbarəfskʲɪj kraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்), இது உருசியாவின் தூரக்கிழக்கில் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் அமுர் ஆற்றின் வடிநிலத்தின் தாழ்பகுதியில் உள்ளதென்றாலும், இப்பகுதி பசிபிக் பெருங்கடலைச் சார்ந்த ஒக்கோஸ்ட் கடலோரப் பகுதி ஊடாக பரவியுள்ள, பரந்த மலைப்பாங்கான பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாக உள்ளது. பிராந்தியத்தின் தலை நகரம் கபரோவ்ஸ்க் நகரம் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு).[7] இப் பகுதியில் பல்வேறு பழங்குடி மக்களான துங்குசிக் மக்களும் (இவின்கர், நிகிடாலர், உல்ச்சர், நனை, ஒரோச், உதேகி) அமுர் நிவிக் மக்களும் வாழ்கின்றனர்.[12] நிலவியல்கபரோவ்ஸ்க் பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கில் மகதான் மாகாணமும், மேற்கில் சகா குடியரசு மற்றும் அமுர் மாகாணமும், தெற்கில் யூதர்களின் தன்னாட்சி மாகாணம், சீனா, மற்றும் பிறிமோர்ஸகே மாகாணம், கிழக்கில் ஒக்கோட்ஸக் கடல் ஆகியன உள்ளன. இப்பிராந்தியம் பரப்பளவின் அடிப்பையில் உருசியக் கூட்டமைப்பில் நான்காவது பெரிய பகுதியாகும் பெரிய தீவான ஷண்டர் தீவு இப்பிராந்தியத்துக்கு உட்பட்டது. தைகா மற்றும் பனிப் பிரதேசங்கள் பிராந்தியத்தின் வடபகுதியில் உள்ளன. பிராந்தியத்தின் நடுவில் சதுப்பு நிலக் காடுகள், தெற்கில் இலையுதிர் காடுகள் என இயற்கை அமைப்பைக் கொண்டுள்ளது. வரலாறுபல்வேறு சீன மற்றும் கொரிய பதிவுகளில் கபரோவ்ஸ்க் பிரதேசம் குறித்த குறிப்புகள் உள்ளன. பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் ஐந்து அரை நாடோடி இன ஷிவி மக்களும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போ ஷிவி இனத்தவர், கறு நீர் மோகர் இனத்தவரும் வாழ்கின்றனர். 1643 ஆம் ஆண்டில், உருசிய ஆய்வாளரான வாசிலி போயர்கோஎன்பவர் தன் படகுகள் வழியாக அமூரை அடைந்து, பின்னர் யாகுட்சுக் நகருக்கு ஒக்கோட்ஸ்க் கடல் மற்றும் அல்டன் ஆறு வழியாக திரும்பினர். 1649-1650 இல் உருசிய தொழிலதிபரும், சாகச வீரருமான யுரோஃபி கபரோ என்பவர் அமூர் கடற்கரையை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவர்களுடைய கோட்டைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, நிர்சின்ஸ்க் உடன்படிக்கை (1689) மூலம் உருசியா இதைவிட்டு வெளியேறியது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருசிய இராசதந்திரியும் தூதருமான நிக்கலை முரவ்வைவோ அமூர் ஆற்றின் கீழ்ப்பகுதி உருசியாவைச் சேர்ந்தது என்று கூறி சீனாவுடன் ஒரு காத்திரமான இராசதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார். 1852, ஆம் ஆண்டு முரவ்வைவாவோ தலைமையிலான ஒரு உருசிய படை ஆமூர் மீது படை நடவடிக்கையில் ஈடுபட்டது, இதன் தொடர்ச்சியாக 1857 ஆண்டு உருசிய கோசாக்குகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் சேர்ந்து நிரந்தரமாக ஆற்றுப்பகுதியில் குடியேறினர். 1858 ஆண்டு சீன குயிங் அரசு மற்றும் உருசியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையில் உருவான ஆய்குன் உடன்படிக்கையின்படி அமூர் ஆற்றின் கீழ்பகுதியில் இருந்து உஸ்ரி ஆற்றின் எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லைகள் அங்கீகரிக்கப்பட்டன. மற்றும் பசிபிக் பெருங்கடலை உருசாயா எளிதாக அணுக அனுமதிக்கப்பட்டது.[13] பின்னர் சீன - உருசிய எல்லை குறித்து 1860 பெய்ஜிங் உடன்படிக்கையில் விவரித்துக் கூறப்பட்டது, முன்பு ஒரு கூட்டு உடைமையாக இருந்த உஸ்சுரி பிரதேசம் (பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு),, உருசியப் பகுதியாக மாறியது.[14] தூரக் கிழக்கு பிரதேசத்தை கபரோவ்ஸ்க் மற்றும் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு என இரண்டாக பிரிந்த போது நவீன கபரோவ்ஸ்க் பிரதேசம், 1938 அக்டோபர் 20 இல் நிறுவப்பட்டது.[11] பொருளாதாரம்கபரோவ்ஸ்க் பிரதேசம் உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் தொழில் வளமிக்கப் பகுதியாக உள்ளது, துரக்கிழக்கு பொருளாதார மண்டலத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிராந்தியம் 30% நிறைவு செய்கிறது. இயந்திர கட்டுமான தொழிலில் பெரிய அளவிலாக வானூர்தி மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இராணுவ தொழில்துறை வளாகங்களைக் கொண்டுள்ளன.[15] கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர் வானூர்தி தயாரிப்பு அமைப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் வெற்றிகரமான தொழில் நிறுவனமாகவும், சில ஆண்டுகளாக பிராந்தியத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது.[15] பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில் உலோகவியல் போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த கனிமங்களை குறைவாகவே கையாள்கிறது. கோம்சோமோசுகி-ஆன்-அமுர் பகுதி தூரக் கிழக்கின் இரும்பு மற்றும் எஃகு மையமாகும்; வடக்கு சக்கலினில் இருந்து பெட்ரோலியக் குழாய் வழியாக கபரோவ்ஸ்க் நகரத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற் மையத்துக்க விநியோகம் செய்யப்படுகிறது. அமுர் பகுதிகளில், கோதுமை மற்றும் சோயா சாகுபடி நடக்கிறது. பிராந்தியத்தின் தலை நகரமான கபரோவ்ஸ்க் அமுர் ஆறு மற்றும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே சந்திக்கும் இடமாக உள்ளது. மக்கள் வகைப்பாடு![]() மக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு); 1,436,570 (2002 கணக்கெடுப்பு); 1,824,506 (1989 கணக்கெடுப்பு) 2010 மக்கள் கணக்கெடுப்பில்,[7] மொத்த மக்கள் தொகையில் உருசியர்கள் 61.8% பேர், உக்ரைனியர் 2.1% பேர், நனைசர் 0.8% பேர், டாட்ரர் 0.6% பேர், கொரியர்கள் 10.6% பேர், சீனர்கள் 8.8% பேர், மங்கோலியர் 11% பேர், பெலருசியர் 0.4% ஆவர். 55,038 பேர் நிர்வாகத் தரவுகளில் தங்களது இனத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை.[16] இவை அல்லாமல் கூடுதலாக பிராந்தியத்தில் பழங்குடி குழுக்கள் உள்ளன வடபகுதியில் இவன்க்ஸ் மற்றும் இவன்ஸ் ஆகிய பழங்குடியினரும், கீழ் அமுர் ஆற்றுப் பகுதியில் நிவிக்ஸ் என்னும் பழங்குடி மீன்பிடி மக்கள் ஒரு தனிமைப்பட்ட மொழி பேசுகின்றனர், இவர்கள் அமுர் ஆற்றின் வடிநிலப் பகுதியைச் சுற்றி வாழ்கின்றனர். இப்பகுதியின் சிறிய பழங்குடி குழுக்களான நிகிடால்ஸ் (567), ஒரோசிஸ் (686), உத்தேகி (1,657), டாஜ் மக்கள் (3) வாழ்வதாக 2002 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரிகிறது.
2008 ஆண்டு பிறப்பு விகிதம் 2007 ஆண்டை விட 5.2% கூடுதல் ஆகும், மேலும் இறப்பு விகிதம் 1.4% குறைவு. 2007 ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 11.6 ( நகரப் பகுதியில் 11.1, மற்றும் ஊரகப் பகுதியில் 13.8) . 2007 ஆண்டு இறப்பு விகிதம் 1000 பேருக்கு 14.2 (நகரப் பகுதியில்14.3, ஊரகப் பகுதியில் 14.0). கபரோவ்ஸ்க் பிரதேச கிராம்ப் பகுதிகளில் நேர்மறையான இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்டது (கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக).[17]
சமயம்2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[18] இப்பிரதேசத்தில் 26.2% பேர் உருசிய மரபுவழி திருச்சபையினர், 4% பேர் திருச்சபை சாராத கிறித்தவர், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்தவர் அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையை மட்டும் ஏற்பவர்கள் பிற திருச்சபையைகளை ஏற்காதவர்கள், 1% பேர் இசுலாமியர். மக்கள் தொகையில், 28% மத நம்பிக்கை அற்றவர்கள், 23% பேர் நாத்திகர், 16.8% பேர் தங்கள் தங்கள் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.[18] மேற்கோள்கள்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia