நோவசிபீர்சுக் மாகாணம்
நோவசிபீர்சுக் மாகாணம் (Novosibirsk Oblast, உருசியம்: Новосиби́рская о́бласть நவசிபீர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் மற்றும் பொருளாதார மையம் நோவசிபீர்சுக் நகரம் ஆகும். இதன் மக்கள் தொகை 2.665.911 இது 2010 ஆண்டைய கணக்கெடுப்பு .[8] புவியியல்நோவசிபீர்சுக் மாகாணம் மேற்கு சைபீரியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஒப்லாஸ்துவின் எல்லைகளாக மேற்கில் ஒம்ஸ்க் ஒப்லாஸ்து , வடக்கில் தோம்ஸ்க் ஒப்லாஸ்து , கிழக்கில் கெமரோவோ ஒப்லாஸ்து, அல்த்தாய் பிரதேசம் மற்றும் கசக்ஸ்தான் ஆகியவை உள்ளன. ஒப்ளாஸ்ட் பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்காக 600 (370 மைல்) கிலோமீட்டருக்கும் மிகுதியான நீளமும், வடக்கில் இருந்து தெற்காக 400 கிலோமீட்டருக்கும் மிகுதியான நீளமும் (250 மைல்) கொண்டுள்ளது இந்த. ஒப்ளாஸ்து தெற்கு பகுதி பெரிதும் வெற்று நிலமாகவும், புல்வெளிகள் கொண்டதாகவும் உள்ளது. வட பகுதி சதுப்பு நிலங்களும் பெரிய அளவிலான வனப்பகுதியைக் கொண்டதாகவும் நிலவுகிறது. தெற்கில் பல ஏரிகள் அமைந்துள்ளன. பல ஆறுகள் பாய்கின்றன குறிப்பாக ஓன் ஆற்றின் வடிநிலம் இங்குதான் அமைந்துள்ளது. இயற்கை வளங்கள்2007 ஆம் ஆண்டு வரை, இப்பகுதியில் உள்ள எண்ணெய் இருப்பு என்பது 204 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டது. இது மட்டுமல்லாது கூடுதலாக, நோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து 600 மில்லியன் கன மீட்டர் எரிவாயு இருப்பு கொண்டுள்ளது. பின்வரும் உலோகங்களை இப்பகுதியில் காணலாம்: சிர்கோனியம் டை ஆக்சைடு (0.7 மில்லியன் டன்), டைட்டானியம் டை ஆக்சைடு (2.9 மில்லியன் டன்), பாக்சைட் (2,068,000 டன்), மற்றும் தகரம் (588,000 டன்). இதன் தென்கிழக்கு பிராந்தியத்தில் திறந்தவெளி தங்கச் சுரங்கங்கள் உள்ளன.[14] நோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து உயர் தரம்வாய்ந்த கருப்பு நிலக்கரி 5,527 மில்லியன் டன் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது குக்கிங் கோல் என்னும் வகையைச் சேர்ந்த நிலக்கரி 2,720 மில்லியன் டன் கொண்டுள்ளது.[14] நாள் ஒன்றுக்கு 6.948 கன மீட்டர்கள் அளவுள்ள கனிம நீர் என்னும் புட்டி குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.[14] இந்த ஒப்ளாஸ்து 509,88 மில்லியன் கன மீட்டர் மரங்களைக் கொண்ட காடுகளைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள காடுகள் 4.531.800 எக்டேர் ஆகும், காலநிலைநோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து கோப்பென் காலநிலை பின்வரும் வகைப்பாடு கொண்டது. சராசரி வெப்பநிலை சனவரி -19 டிகிரி செல்சியஸ் (-2 ° பாரங்கீட்) சூலை மாதம் +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்) ஆகும். ஆண்டு மழைபொழிவு 300-500 மில்லி மீட்டர் ( 12-20 அங்குலம்) ஆகும்.[14] மக்கள் வகைப்பாடுஇப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 2,665,911 ( 2010 கணக்கெடுப்பு ); 2,692,251 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,782,005 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[8] இப்பிராந்தியத்தின் இனக் குழுக்களின் விகிதம் 93,1% ரஷ்யர்கள் ; 1.2% ஜேர்மனியர்கள் ; 0.9% உக்ரேனியர்களை ; 0.9% தடார்களுக்கும் ; 0.4% கசாக்குகள் ; 0.2% பெலாரஷ்யர்கள் ; 0.4% ஆர்மேனியர்கள் ; 0.3% அசீரியர்கள், 0.5% உஸ்பெக்கியர். ஆவர் 124.859 மக்கள் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாதவர்கள்.[15]
[18] 2009 - 1.59 | 2010 - 1.60 | 2011 - 1.59 | 2012 - 1.71 | 2013 - 1.75 | 2014 - 1.76 (இ) சமயம்2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின்படி[19] நோவசிபிர்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 24.9% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர் 1% பின்பற்றுவது ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் ஆகும். 1% இஸ்லாமியர் . மக்கள் தொகையில் 32% மத நாட்டம் அற்றவர்கள். 25% நாத்திகர் , 11.1% பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மதத்தை பற்றிய கேள்விக்கு பதிலலிக்காதவர்களோ ஆவர்.[19] பொருளாதாரம்நோவசிபிர்ஸ்க் ஒப்லாஸ்துவின் மொத்த பிராந்திய தயாரிப்பு 2007 ல் $ 14,950.2 மில்லியன் ஆகும்.[14] ஒரு நபருக்கான உற்பத்தி என்பது 144.869 ரூபிள் என்று இருந்தது; . தேசிய சராசரி அளவான 198.817 ரூபிள் என்பதுடன் ஒப்பிடும்போது குறைவே.[20] பல ஆண்டுகளாக, இப்பிராந்தியத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது, 1999முதல் 2008 வரையான காலகட்டத்தில் இதன் தொழில்துறை வளர்ச்சி எனபது 170% உயர்ந்தது. அதே காலகட்டத்தில் இரஷ்யாவின் தேசிய அளவிலான தொழில்துறை உற்பத்தி 23% வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மின்னுற்பத்திநோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து ஒரு மின் உபரி பிராந்தியமாகும்.பிராந்தியத்தின் மின் நுகர்வு 12.5 பில்லியன் கிலோவாட் என்று இருந்த போது 2007 இல் மின் தயாரிப்பு என்பது 14.0 பில்லியன் கிலோவாட் என்று இருந்தது. கோடைக் காலத்தில், பிராந்தியத்தின் மின்சார தேவையில் 30% நோவஸிபிர்ஸ்க் நீர்மின்சக்தி நிலையம் பூர்த்தி செய்கிறது. இந்த நீர் மின்நிலையத்தின் திரன் என்பது 455 மெகாவாட் ஆகும்,. மின் உற்பத்தியின் மற்றொரு முதன்மையான உற்பத்தி பிரிவான அனல் மின்நிலையங்கள் விளங்குகின்றன. பிராந்தியத்தில் உள்ள 5ஆம் எண் கொண்ட அனல் மின் நிலைத்தின் திரன் 1,200 மெகாவாட் ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia