சராத்தவ் மாகாணம் (Saratov Oblast, உருசியம்: Сара́товская о́бласть, சராத்தொவ்சுக்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சராத்தவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 2,521,892.[8]
புவியமைப்பு
சராத்தவ் ஓப்லஸ்து ஐரோப்பிய ரசியாவின் தென்கிழக்கிலுள்ள கீழ் வோல்கா வட்டாரத்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது.
கிழக்கு மேற்காக 575 கிலோமீட்டர்கள் (357 mi), வடக்கு தெற்காக 330 கிலோமீட்டர்கள் (210 mi) என்றவாறு பரவியுள்ளது.
ஓப்லஸ்தில் பல நீர்நிலைகள் உள்ளன. ஓப்லஸ்தை இரண்டாகப் பிரிக்கும் வோல்கா ஆற்றைத் தவிர பல கனிப்பொருணீர்ப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்கள் வகைப்பாடு
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இப்பகுதியில், ஒவ்வொன்றிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இருபது இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[14] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 4% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் 2% இஸ்லாமியர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.5% இந்து (வேதமுறை, கிருஷ்ணாவியம், தாந்திரியம்) 38% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 16% நாத்திகர்கள், 7.5% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[14]
மேற்கோள்கள்
↑The official symbols of Saratov Oblast, enumerated in Article 4 of the Charter of Saratov Oblast, include only its flag and coat of arms.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).