அமூர் மாகாணம் (Amur Oblast, உருசியம்: Аму́рская о́бласть, ஒ.பெ அமூர்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகு ஆகும். இது உருசியாவின் தூர கிழக்கே ஆமூ தாரியா ஆற்றிற்கும் சேயா ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் ஆகும். இதன் நிருவாகத் தலைநகர் பிலாகோவெசுச்சென்சுக் ஆகும். இந்நகர் தூரகிழக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான குடியெற்றம் ஆகும். 1856 ஆம் ஆண்டில் இந்நகர் அமைக்கப்பட்டது. வணிகம், மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது. 2010 கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 830,103 ஆகும்.[8]உருசியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி "அமூர் கிராய்" (Amur Krai, Аму́рский край) என வழங்கப்பட்டு வந்தது.
அமூர் மாகாணம் உருசியாவின் தென்கிழக்கே உள்ளது. இதன் வடக்கே இசுத்தானவோய் மலைத்தொடருக்கும், தெற்கே அமூர் ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக வடக்கே சகா குடியரசும், கிழக்கே யூதத் தன்னாட்சி மாகாணமும், தெற்கே சீனாவின்கெய்லோங்சியாங் மாகாணமும், மேற்கே சபாய்க்கால்சுக்கி கிராயும் உள்ளன.
மக்கள்
2010 மக்கள் கண்க்கெடுப்பின் படி,[8] 94.3% உருசியர்களும் (775,590), 2% உக்ரைனியர் (16,636), 0.5% பெலருசியர் (4,162), 0,4% தத்தார்களும் (3,406) வாழ்கின்றனர். இவர்களைவிட 120 இற்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களும் இங்குள்ளனர்.[13]
↑Article 3 of the Charter of Amur Oblast does not specify any symbols of the oblast other than the flag and the coat of arms
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).