பேர்ம் பிரதேசம்
பேர்ம் பிரதேசம் (Perm Krai (உருசியம்;Пе́рмский край , tr. Permsky kray; IPA: [ˈpʲɛrmskʲɪj ˈkraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்) இந்த பிரதேசத்தின் தலை நகரம் பேர்ம் நகரமாகும். இதன் மக்கள் தொகை: 2,635,276 (2010 கணக்கெடுப்பு).[7] நிலவியல்பேர்ம் பிரதேசம் ஐரோப்பிய சமவெளியின் கிழக்கிலும் மற்றும் நடு யூரல் மலைத்தொடரின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் 99.8% பரப்பளவு ஐரோபாவிலும், 0.2% பரப்பளவு ஆசியாவிலும் உள்ளது.
இந்த கிராயின் எல்லைகளாக வடக்கில் கோமி குடியரசு, வடமேற்கில் கீரொவ் மாகாணம், தென்மேற்கில் உத்மூர்த்தியா குடியரசு, தெற்கில் பாஷ்கெரட்டா குடியரசு, கிழக்கில் சிவெர்த்லோவ்சுக் மாகாணம் ஆகியன உள்ளன. கிராயின் எல்லையின் நீளம் 2,200 கிலோ மீட்டர் (1,400 மைல்) ஆகும். பிரதேசத்தின் உயரமான இடம் துலேம்ஸ்கே கமெண்ட் மலை இதன் உயரம் 1,496 மீட்டர் (4,908 அடி) ஆகும். ஆறுகள்![]() ![]() பேர்ம் பிரதேச ஆறுகள் காம வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவை. இவை வோல்கா ஆற்றின் மிகப்பெரிய கிளை நதியைச் சேர்ந்தவை. பேர்ம் பிரதேசத்தில் 29,000 க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. அனைத்து ஆறுகளின் மொத்த நீளம் 90,000 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் (56.000 மைல்) போர்ம் பிரதேசத்தில் வெறும் இரண்டு ஆறுகளின் மொத்த நீளமே மிக நீண்டதாக 500 கிலோ மீட்டர் (310 மைல்)விட கூடுதலாக உள்ளது. இந்த ஆறுகளில் கமா ஆறு 1,805 கிலோ மீட்டர் (1,122 மைல்) மற்றும் சுசோவயா ஆறு, 592 கிலோமீட்டர் (368 மைல்) நீளம் உடையது. இந்தப் பிரதேசத்தில் 100 to 500 கிலோ மீட்டர் (62 முதல் 311 மைல்) நீளமுள்ள 40 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் நீளம் பின்வறுமாறு:
இங்கு இன்னும் பல சிறிய ஆறுகள் பாய்கின்றன, சிறிய ஆறுகள் என்றாலும் சில ஆறுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, எடுத்துக்காட்டாக எகோஷிகா ஆற்றின் முகத்துவாரத்தில் பேர்ம் நகரம் நிறுவப்பட்டது. காலநிலைபேர்ம் பிரதேசம் ஐரோப்பிய காலநிலையைக் கொண்டது. குளிர்காலம் நீண்டதாகவும், பனிப்பொழிவு கொண்டதாகவும் இருக்கும். சனவரி மாத சராசரி வெப்பநிலை பேர்ம் பிரதேசத்தில் இடத்திற்கு ஏற்ப வேறுபட்டதாக, வடகிழக்கில் −18 °செ (0 °பா) முதலும், தென் மேற்கில் −15 °செ (5 °பா) வரையிலும் வெப்பநிலை நிலவும். பிரதேசத்தில் குறைந்த பட்ச வெப்பநிலையாக இதுவரை ஆன பதிவின்படி −53 °செ (−63 °பா) (வடக்கில்) ஆகும். கனிமங்கள்![]() பிரதேசம் கனிமவளம் மிக்கதாக உள்ளது, இதன் மலைப்பகுதிகளிலும், சமவெளிகளிலும் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. இங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வைரம், குரோமைற்று, கரி, சுண்ணாம்பு, கட்டட மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கின்றன.[12] இந்த பிரதேசத்தின் வெர்னிசூசோவிஸ்கி கோரோடிக் என்ற பகுதிக்கு அருகில் கச்சா எண்ணெய் 1929 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதுவரை 180 எண்ணெய், எரிவாயு வயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பயன்பாட்டுக்கு வந்திருப்பவை: 89 எண்ணெய், 2 எரிவாயு மற்றும் இரண்டும் கிடைக்கும் 18 வயல்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை கிராயின் நடு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவை. வடக்கு பகுதி வயல்கள் குறைவாகவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன, காரணம் இதன் தரைக்குக் கீழே உப்புப் படுக்கை உள்ளதால் அதைத்தாண்டி எண்ணெயும் எடுக்கவேண்டி இருப்பதே காரணம். இப்பிரதேசத்தில் நிலக்கரி சுமார் 200 ஆண்டுகளாக தோண்டி எடுக்கப்படுகிறது. நீண்ட காலமாக இதுவே பிராந்தியத்தின் எரிபொருள் தேவைக்கு முதன்மையான பொருளாக இருந்து வந்தது. 1960 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 12 மில்லியன் டன் நிலக்கரி இப்பிராந்தியத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. அதன்பிறகான காலகட்டத்தில் நிலக்கரி இருப்பு குறைவு ஏற்பட்டது, புதிய வயல்களும் கண்டறியப்படவில்லை. பேர்ம் பிரதேசம் பொட்டாசியம் உப்புக்களைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உப்பு இருப்புகளில் ஒன்று ஆகும். இப்பகுதியில் சுமார் 1,800 சதுர கி.மீ. பரப்பளவில், உப்பு அடுக்குகள் 514 மீட்டர் தடிமன்வரை உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்இப்பிரதேசத்தில் வனப்பகுதி சுமார் 71% நிலப்பரப்பில் உள்ளது. வனப்பகுதியில் பிரதானமாக ஊசி இலைக்காடுகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக வரவர இலையுதிர் காடுகளின் பரப்பு அதிகரிக்கிறது. இந்தக் காடுகளில் 62 பாலூட்டி விலங்குகளும், 270 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 39 மீன் இனங்களும், 6 ஊர்வன இனங்களும், 9 இருவாழிகளும் உள்ளன. பொருளாதாரம்இரும்பு அல்லாத உலோகங்களான பொட்டாஷ், மக்னீசியம் மற்றும் அரிய உலோகங்களைச் சார்ந்த தொழில்கள் உள்ளன. பிரதேசத்தில் தொழிற்சாலைகள் பிரென்சிகி (டைடானியம் மக்னீசியம் பிளாண்ட் கார்பரேசன் VSMPO) மற்றும் சோலிகமஸ்க் (ஜேஎஸ்சி சோலிகமஸ் மக்னீசியம் பிளாண்ட்) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இராணுவ பொருட்கள் தயாரிப்புப் பொறியியல் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பொறியியல் துறையில் மிகப் பெரிய மையமாக பேர்ம் உள்ளது; இங்கு வானூர்தி மற்றும் ஏவுகணை விசைப்பொறிகள், எண்ணெய் வயலில் சுரங்க உபகரணங்கள், பெட்ரோலில் இயங்கும் மர அறுப்புக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், நீரூர்தி, வடகம்பி போன்ற பிற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மக்கள் வகைப்பாடு![]() 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, பேர்ம் கிராயின் மக்கள் தொகை 2,635,276;[7] 2002 மக்கள் கணக்கெடுப்பின் மக்கள் தொகையான 2,819,421 விட குறைவு,[13] மற்றும் 1989 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுபில் மக்கள் தொகையான 3,099,994 விடவும் குறைவு ஆகும்.[14] 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி இனக்குழுக்கள் விவரம்:[7] உருசியர் (87.1%), கோமி-பெர்ம்யாகர் (3.2%), தடார்கள் (4.6%), பஸ்கிகிரர் (1,3%), உக்ரைனியர் (0,6%), உத்மர்டர் (0,8%), பெலாருசியர் (0,3%), செர்மானியர் (0,3%) மற்றும் பிறர். மக்கள் தொகையில் 119,538 பேர் தங்கள் இனம் குறித்து தெரிவிக்கவில்லை.[15] 2002 மக்கள் கணக்கெடுப்பின்படி பேர்ம் கிராயில் 40,740 பாஷ்கிரி மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் பார்டேம்ஸ்கே மாவட்டத்தில் வாழ்கின்றனர். பெரும்பாலும் துவா ஆற்றை ஒட்டிய பகுதியில் வாழும் இவர்கள் கைனா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். தடார்கள் உள்ள பேர்ம் பிரதேசத்தின் கிட்டத்தட்ட அனைத்து குடியேற்றங்களிலும் வாழ்கின்றனர். தடார் மக்களிடையே பல்வேறு இனக் குழுக்கள் உள்ளன.[16][17] 2007 முதன்மை புள்ளிவிவரங்கள்:
பேர்ம் பிரதேசத்தின் சில பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இறப்பு விகிதம் மிகக் கூடுதலாக உள்ளளது, போர்கள், இயற்கை அழிவுகள் நடந்த காலத்தைத் தவிர இதுபோன்று இருப்பதில்லை. மொத்தமுள்ள 47 மாவட்டங்களில் வெறும் ஐந்து மாவடங்களில் இறப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் கூடுதலாக உள்ளது. பேர்ம் கிராயின் பிறப்பு விகிதம் பிற ஐரோப்பிய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகக் கூடுதலாக உள்ளது. காட்டாக, ஜெர்மனியின் பிறப்பு விகிதம் 2007 இல் 1000 பேருக்கு 8.3 ஆகும். பேர்ம் பிரதேசம் முழுமையும் 50% மிகக் கூடுதலான பிறப்பு விகிதத்ததைக் கொண்டுள்ளது.[18] சமயம்2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[19] போர்ம் கிராய் மக்கள் தொகையில் 43% பேர் உருசிய மரபுவழி கிருத்தவர், 5% பேர் திருச்சபை சாராத பொதுவான கிருத்தவர், 4% பேர் முஸ்லிம், 2% பேர் ரோத்னவர் (ஸ்லாவிக் நாட்டுப்புர சமயம்), 1% பழைய நம்பிக்கையாளர்கள், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்துவத்தை நம்புபவர்கள், பிற திருச்சபைகளை ஏற்காதவர்களாகவோ அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபை உறுப்பினர்களாக இருப்பவர்கள், 8% பேர் பிற சமயத்தவர்களாகவோ அல்லது தங்கள் சமய நம்பிக்கை குறித்து கணக்கெடுப்பின்போது தெரிவிக்காதவர்களோ ஆவர், 24% பேர் கடவுள் நம்பிக்கை உடயவர்கள் ஆனால் மத நம்பிக்கை அற்றவர்கள், 14% பேர் நாத்திகர் அல்லது சமயமற்றவர்கள்.[19] கவனத்தைக் கவருபவை![]() ![]() பேர்ம் கிராயில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன:
பேர்ம் பிரதேசத்தின் வடக்கில் உள்ள சிறிய நகரமான உசோலியில் ஏராளமான தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக தனி மணி கோபுரம் கொண்ட, இரட்சகராக கதீட்ரல் போன்றவை ஆகும். போர்ம் பிரதேசத்தில் பல அரங்கங்கள் உள்ளன அவை, பேர்ம் ஓபரா மற்றும் பாலே அரங்கம், பேர்ம் கல்வி அரங்கம், பப்பட் அரங்கம், இளம் பார்வையாளர்களுக்கான அரங்கம், "நியூ பிரிட்ஜ்" அரங்கம் மற்றும் சில அரங்கங்கள் உள்ளன. பேர்ம் பிரதேசத்தில் பல கோயில்கள், மடாலயங்கள் உள்ளன, இவைகளில் மிகவும் முக்கியமானவை சில: பேர்ம் நகரில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள பிலோங்கோர்க்கி கான்வென்ட் பேர்ம், ஸலூட்ஸ்கே தேவாலயம், ஃபிடோசிவிஸ்கே தேவாலயம், பேர்ம் பள்ளிவாசல் மற்றும் பிற. போர்ம் பிரதேசத்தின் ஓர்டின்ஸ்கே பகுதி ஒர்டா நீரடி குகை உள்ள பகுதியாக உள்ளது. இவை ஓர்டா என்னும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இக்குகையே உலகில் உள்ள நீரடி குகைகளில் மிகப்பெரியது ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia