உருசிய தெற்கு நடுவண் மாவட்டம்
தெற்கு நடுவண் மாவட்டம் (Southern Federal District, உருசியம்: Ю́жный федера́льный о́круг, ஒ.பெ Yuzhny federalny okrug, பஒஅ: [ˈjuʐnɨj fʲɪdʲɪˈralʲnɨj ˈokrʊk] யுஸ்னி ஃபெடரல்னி ஓக்ரக் , ஐபிஏ: [ˈJuʐnɨj fʲɪdʲɪˈralʲnɨj ˈokrʊk] ) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தப் பிரதேசம் பெரும்பாலும் தெற்கு ரஷ்யாவின் போன்டிக்-காஸ்பியன் புல்வெளியில் உள்ளது. தெற்கு நடுவண் மாவட்டத்திற்கு எல்லைகளாக உக்ரைன், அசோவ் கடல் ஆகியவையும், மேற்கில் கருங்கடல், மற்றும் கஜகஸ்தானும், கிழக்கில் காசுப்பியன் கடல் போன்றவை உள்ளன.[4] மே 2000 இல் நிறுவப்பட்டபோது தெற்கு நடுவண் மாவட்டம் முதலில் வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது, ஆனால் அரசியல் காரணங்களுக்காக 21 ஜூன் 2000 அன்று பெயர் மாற்றபட்டது. ஜனவரி 19, 2010 அன்று, தெற்கு நடுவண் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, இதன் முந்தைய தெற்கு பிரதேசங்களைக் கொண்டு புதியதாக வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் உருவாக்கபட்டது . ![]() 28 சூலை 2016 அன்று கிரிமியன் நடுவண் மாவட்டம் (இதில் கிரிமியா குடியரசு மற்றும் நடுவண் நகரமான செவாஸ்டோபோல் ஆகியவை அடங்கும் ) அகற்றப்பட்டு "நிர்வாக வசதிக்காக" தெற்கு நடுவண் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. கிரிமியன் நடுவண் மாவட்டம் உருசிய கூட்டமைப்புடன் கிரிமியாவை இணைத்த பின்னர் 21 மார்ச் 2014 அன்று நிறுவப்பட்டது. நடுவண் மாவட்டத்தில் கிரிமியா குடியரசு மற்றும் நடுவண் நகரமான செவாஸ்டோபோல் ஆகியவை அடங்கும், இவை இரண்டும் உக்ரைனின் பகுதியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய பகுதிகளையும் உருசியாவால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாக உக்ரைன் கருதுகிறது.[5][6] 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 13,854,334 (62.4% நகர்ப்புறம்) ஆகும். பரப்பளவு 420,900 சதுர கிலோமீட்டர்கள் (162,500 sq mi) ஆகும். புள்ளிவிவரங்கள்நடுவண் பகுதிகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia