யமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம் (Yamalo-Nenets Autonomous Okrug; உருசிய மொழி: Яма́ло-Не́нецкий автоно́мный о́круг, Yamalo-Nenetsky Avtonomny Okrug; Nenets: Ямалы-Ненёцие автономной ӈокрук) என்பது ஒரு உருசிய கூட்டாச்சி அமைப்பைச் சேர்ந்த பகுதி (ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்) ஆகும். இதன் நிர்வாக மையம் சலிகர்ட் ஆகும். இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் நோயாப்ரஸ்க் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 522,904 ( 2010 கணக்கெடுப்பு ).[7]
புவியியல் மற்றும் இயற்கை வரலாறு
நெனெத்து மக்களே இப்பகுதியில் நீண்டகாலமாக எஞ்சியிருக்கும் பழங்குடிகள் ஆவர். இவர்களுடைய வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை தொழில் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகும். துருவக் கரடிகளை வேட்டையாடும் நடைமுறை தற்போதைய காலம் வரை தொடர்கிறது.[12]
வரலாறு
திசம்பர் 10, 1930 இல் இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான உரால் ஒப்லாஸ்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மக்கள் தொகை
இந்த தன்னாட்சி பகுதியின் மக்கள் தொகை : 522,904 ஆகும் (2010 கணக்கெடுப்பின்படி); 507,006 (2002 கணக்கெடுப்பின்படி); 486,164 (1989 கணக்கெடுப்பு).
நினிட்ஸ் இன மக்கள் மக்கள் தொகையில் 5.9% வரை உள்ளனர். ரஷ்யர்கள் (61.7%), உக்ரேனியர்கள் (9.7%), தடார்கள் (5.6%). மற்ற முக்கியமான இன குழுக்களான பெலாரஷ்யர்கள் (1.3%), காண்ட்ஸ் (1.9%), அசர்பைசன்ஸ் (1.8%), பாஷ்கிர்ஸ் (1.7%), கோமி (1%), மொல்டோவன்ஸ் (0.9%) என்ற எண்ணிக்கையில் இனக்குழுவினர் உள்ளனர். (எல்லா விவரங்களும் 2010 கணக்கெடுப்பில் இருந்து).[7] கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ள இடங்களில் உருசிய மக்களின் எண்ணிக்கை வளர்கின்ற சில இடங்களில் ஒன்றாகும்.
1 17,517 மக்கள் நிர்வாக தரவுத்தளங்களில் தங்கள் இனம் குறித்து அறிவிக்கவில்லை. [14]
மதம்
2012 அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப்படி[15][16] இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 42.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 14% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிறித்தவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர். 1% சுலாவிக் நாட்டுப்பற மதத்தினர் (சுலாவிக் நியோபகனியம்) அல்லது சமானிய மதம், 1% முதல் சீர்திருத்தத் திருச்சபை, முஸ்லிம்கள் , கெளகேசிய மக்கள், தட்டார்கள் போன்றோர் மொத்த மக்கள் தொகையில் 18% உள்ளனர். மக்கள் தொகையில் 14% மத ஈடுபாடு அற்றவர்கள். 8% நாத்திகர் மற்றும் 0.8% மதம் பற்றிய கேல்விக்கு பதிலளிக்காதவர்கள் ஆவர்.
பொருளாதாரம்
இந்த தன்னாட்சி பிராந்தியமே உருசியாவின் மிக முக்கிய இயற்கை எரிவாயு ஆதாரமாக இருக்கிறது. உருசியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 90% இங்கிருந்தே கிடைக்கிறது, மேலும் இந்தயில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் என்பது உருசியாவின் எண்ணெய் உற்பத்தியில் 12% ஆகும்.[17] உருசியாவின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான கேஸ்ப்ரோம் தன் முக்கிய தயாரிப்பு துறைகளை இங்கேயே அமைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவமான நோவாட்கி இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
↑ 4.04.1Charter of Yamalo-Nenets Autonomous Okrug, Article 11