வொலக்தா மாகாணம் (Vologda Oblast, உருசியம்: Вологодская область, வொலக்கொட்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் வொலக்தா ஆகும். இதன் மக்கள்தொகை: 1,202,444 (2010 கணக்கெடுப்பு).[8] பிராந்தியத்தின் பெரிய நகரம் செரிபோவிட்சு ஆகும். பெரிய உலோக ஆலை நிறுவனமான செவெர்ஸ்தாலின் இந்த மாகாணம் சார்ந்த தொழில் நிறுவனமாகும். வொலக்தா மாகாணம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டது.
புவியியல்
வொலக்தா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே அர்காங்கெல்சுக் மாகாணம், கிழக்கே கீரொவ் மாகணம், தென்கிழக்கே கொசுத்துரோமா மாகாணம், தெற்கே யாரோசிஉலாவ் மாகாணம், தென்மேற்கே துவெர், நோவ்கோரத் மாகாணம், மேற்கே லெனின்கிராத் மாகாணம், வடமேற்கே கரேலியா ஆகியன உள்ளன. வொலக்தா ஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் காடுகளும் மலைப்பாங்கான நில அமைப்பும் கொண்டது.
மக்கள் வகைப்பாடு
வொலக்தா ஒப்லாசுது மக்கள் தொகை: 1,202,444 ( 2010 கணக்கெடுப்பு ); 1,269,568 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,353,870 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[16] வொலக்தா மாகாணம் மக்கள்தொகையில் 29.5% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 2% பொதுவான கிருத்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 1% பழைய நம்பிக்கையாளர், 39% கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் மத ஈடுபாடு அற்றவர்கள் 20% நாத்திகர், 6.5% பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
மேற்கோள்கள்
↑Article 2 of the Charter of Vologda Oblast does not specify any symbols of the oblast other than a flag and a coat of arms
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).