சிமோலியென்சுக் மாகாணம் (Smolensk Oblast, உருசியம்: Смоле́нская о́бласть, சிமோலியென்ஸ்க் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சிமோலியென்சுக் நகரம். 2010 ஆம் ஆண்டின் ரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 985,537.[9]
புவியியல்
சுமலியேன்ஸ்க் ஒப்லாசுது செப்டம்பர் 27 1937 இல் நிறுவப்பட்டது.[13] இதன் எல்லைகளாக வடக்கில் பிசுக்கோவ் ஒப்லாஸ்து, வடகிழக்கில் துவர் ஒப்லாஸ்து கிழக்கில் மாஸ்கோ ஓப்லஸ்து, தெற்கில், களுகா மற்றும் ப்ரையன்ஸ்க் ஓப்லாஸ்துகள்,மேற்கிலும் வடமேறிகிலும் பெலாரூஸ் மற்றும் விதெப்ஸ்க் ஓப்லாஸ்துகள் மற்றும் பெலருஸ் நாடு ஆகியவற்றை கொண்டுள்ளது.
காலநிலை
சுமலியேன்ஸ் ஒப்லாஸ்துவன் காலநிலையில் நீண்ட குளிர்காலமும் பனிபெய்யக்கூடியதாகவும், குறுகிய வெப்பமான மழைகொண்டதாக கோடைக்காலமும் கொண்டிருக்கும். சராசரி வெப்பநிலை சனவரியில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்), சூலைமாதத்தில் சராசரியாக 17 °செல்சியஸ் (63 °பாரங்கீட்) நிலவும். ஆண்டு மழைபொழிவு 630 மில்லி மீட்டர் முதல் 730 மில்லி மீட்டர் வரை உள்ளது.
நிர்வாக பிரிவுகள்
சுமலியேன்ஸ்க் ஒப்லாஸ்து 25 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2 மாநகரங்களையும், 15 நகரங்களையும் கொண்டுள்ளது. 12 நகர்ப்புற-வகை குடியிருப்புகள், மற்றும் 302 கிராமப்புற பகுதிகளும் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
ஒப்லாசுதின் மக்கள் தொகை: 985,537 ( 2010 கணக்கெடுப்பு ); 1,049,574 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,158,299 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 19.5% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். , 7% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 3% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள்2% பழைய நம்பிக்கை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.4% கத்தோலிக்க திருச்சபை கிருத்தவர்கள், 45% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 13% நாத்திகர்கள், 9.1% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]
மேற்கோள்கள்
↑Article 14 of the Charter of Smolensk Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
↑"Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019.
↑Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
↑ 13.013.1Исполнительный комитет Смоленского областного совета народных депутатов. Государственный архив Смоленской области. "Административно-территориальное устройство Смоленской области. Справочник", изд. "Московский рабочий", Москва 1981. Стр. 8