ரசுத்தோவ் மாகாணம் (Rostov Oblast, உருசியம்: Росто́вская о́бласть, ரஸ்தோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் தெற்கு நடுவண் மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 (2010 கணக்கெடுப்பு),[7] இந்த மாகாணம் மக்கள்தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தலைநகர் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும்.
ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் உக்ரைனியர்கள் : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16657 ரோமா மக்கள் : (0.4%); 11.597 கொரியர்கள் : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[13]
சமயம்
2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[14][15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 49.5% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 6% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள்,1% முஸ்லிம்கள் 1% ஸ்லாவிக் நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 26% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 3.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]
பொருளாதாரம்
இந்த ஒப்லாசுதுவின் பெரும்பாலான தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்களான உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் கனரகத் தொழில் நிலக்கரி மற்றும் தானுந்து உற்பத்தி போன்ற தொழில்களும் உள்ளன.
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).