மாஸ் விங்ஸ்
![]() மாஸ் விங்ஸ் (ஆங்கிலம்: MASwings (MASwings Sdn Bhd); மலாய்: MASwings) என்பது கிழக்கு மலேசியாவில் வட்டார வானூர்திச் சேவைகளை வழங்கி வரும் ஒரு வானூர்தி நிறுவனமாகும். சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள நாட்டுப்புற நகரங்களுக்குச் சேவை வழங்குவதை (Rural Air Services) இலக்காகக் கொண்டு உள்ளது. இந்த நிறுவனம் மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.[1] ஏர் ஏசியா எக்சு (AirAsia X) அல்லது பிளை ஏசியன் எக்பிரஸ் (FlyAsianXpress) எனும் விமான நிறுவனம் 2006; 2007-ஆம் ஆண்டுகளில் சபா, சரவாக் மாநிலங்களில் நாட்டுப்புற விமானச் சேவையை வழங்கி வந்தது. அதற்கு முன்னர் மலேசியா எயர்லைன்சு நிறுவனம் 1965-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரை அந்தச் சேவையில் ஈடுபட்டு வந்தது. இந்த இரு நிறுவனங்களுக்குப் பிறகு மாஸ் விங்ஸ், அதே நாட்டுப்புறச் சேவையை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் இதன் சேவையை 2007 அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. இதன் தலைமையகம் தற்சமயம் சபா, கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.[2] இதற்கும் முன்னர் மாஸ் விங்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் மிரி வானூர்தி நிலையத்தில் இருந்தது. சேவைகள்
விமானங்கள்![]() சேவையில் உள்ள விமானங்கள்ஜூலை 2020 நிலவரப்படி, மாஸ் விங்ஸ் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது:[3][4]
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia