வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதி
வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதி (Veppanahalli Assembly constituency), கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். ”வேப்பனஹள்ளி” என்றும் சில இடங்களில் வழங்கப்படுகிறது. இந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011-ஆம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 54-ஆவது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது ஆகும். தமிழகத்திலேயே தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் மூன்று மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகளும், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் 24 ஊராட்சிகளும், கெலமங்கலம் ஒன்றியத்தின் 3 ஊராட்சிகளும் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் ஓசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன. இந்துகள் அதிகமாக உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கின்றனர். கவுடா, ரெட்டி சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர், அதாவது இந்த தொகுதியில் கவுண்டர்கள் 20 சதவீதம், நாயுடுகள் 20 சதவீதம், மற்றும் ரெட்டியார், செட்டியார், பழங்குடியினர் 10 சதவிதம், ஆதிதிராவிடர் 15 சதவிதம் என வசித்து வருகின்றார்கள். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். 3ம் பாலினத்தனவர் 32 பேர் உள்ளனர். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. பி. முனுசாமி, திமுக சார்பில் பி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் முருகேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.[2] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்சூளகிரி தாலுக்கா (பகுதி) மாட்டுஓணி, கொல்லப்பள்ளி,சூலகுண்டா, செலவந்தொட்டி, சாப்பரப்பள்ளி, கெத்தலந்தொட்டி, சின்னாரந்தொட்டி, மலகலக்கி, தொட்டேகவுணிப்பள்ளி, குடிசாதனப்பள்ளி, கூள்ளு, நெரிகம், கரியசந்திரம், பன்னப்பள்ளி, மீனாந்தொட்டி, சொக்காபுரம், கோட்டசாதனப்பள்ளி, அமுதோகொண்டபள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், புக்கசாகரம், தோரிப்பள்ளி, பட்டகுருபரப்பள்ளி, கொடிக திம்மனப்பள்ளி கலிங்காவரம், செம்பரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சொரகாயலப்பள்ளி, சகாதேவபுரம், தொட்டூர், மட்டம்பள்ளி, பஸ்தலப்பள்ளி, புக்கனப்பள்ளி, காமன் தொட்டி, சுப்பகிரி, சானமாவு, ஹலேகோட்டா, சாமனப்பள்ளி, எனுசோனை, சென்னப்பள்ளி, தேவரகுட்டப்பள்ளி, குடிசாலப்பள்ளி, ஏர்ராண்டப்பள்ளி, மலசொந்திரம், பாலகொண்டராயணதுர்கம், சின்னகுடிபாலா, இம்மிடிநாயக்கனப்பள்ளி, உல்லட்டி, அகரம் அக்ரஹாரம், துப்புகானப்பள்ளி, தியனதுர்கம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி, உலகம், ஒசஹள்ளி, செக்கலைகோட்டை, மேலுமலை, புக்கனப்பள்ளி மற்றும் மெடிதேபள்ளி கிராமங்கள். தேன்கனிக்கோட்டை தாலுக்கா (பகுதி) நாகமங்கலம், ஊடேதுர்கம், திமிஜேபள்ளி,உள்ளுகுறுக்கை,முத்தனஹள்ளி, டி.கொல்லஹள்ளி, கருக்கனஹள்ளி, செங்கோடசின்னஹள்ளி, சூளகுண்டா, இராயகோட்டை, பில்லாரி அக்ரஹாரம், நெல்லூர், எச்சினஹள்ளி மற்றும் ஒடையாணஹள்ளி கிராமங்கள். கிருஷ்ணகிரி தாலுக்கா (பகுதி) பத்திமடுகு, இடிபள்ளி, ஒட்டபள்ளி, இடிபள்ளி, சிகரலப்பள்ளி, காசிர்கானப்பள்ளி, கொல்லபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்பிரை, கொங்கனப்பள்ளி, சிகரமாக்கனப்பள்ளி, தொட்டகனமா, கங்கமடுகு, மனவாரணப்பள்ளி, சீரனப்பள்ளி, நேரலகிரி, பாலனப்பள்ளி, கிருஷ்ணநாயக்கன்புதூர், அலேகிருஷ்ணாபுரம், தீர்த்தம், எட்டிப்பள்ளி, எட்டிப்பள்ளி தலாவு, பன்னப்பள்ளி, பூதிமுட்லு, உண்டிகாநத்தம், அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம், தங்கடிகுப்பம், ராகிமானப்பள்ளி, கரியசாஹரம்தலாவ், அலேகுந்தானி, நல்லூர், சிம்மல்வாடி, தேவரகுந்தானி, இடையனபள்ளி, கதிரிபள்ளி, கடவாரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, தளிபள்ளி, தாசிகவுனிப்பள்ளி, நாடுவானப்பள்ளி, புரம், அப்பிநாய்க்கன்கோட்டை, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, விருப்பசந்திரன், தாசிரிப்பள்ளி, மாதேப்பள்ளி, தடதாரை, பொம்மரசனப்பள்ளி, சூலமலை, பந்திகுற்க்கி, சின்னகொத்தூர், சென்னசந்திரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டபள்ளி, குண்டப்பள்ளி, லக்கபெத்தலப்பள்ளி, மாரசந்திரம், பொன்னகவுண்டபள்ளி, கோடிப்பள்ளி, நேரலப்பள்ளி, கோதிகுட்டலப்பள்ளி, பெதனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பில்லனகுப்பம், கொல்லபள்ளி மற்றும் புளியஞ்சேரி கிராமங்கள்.[3]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia