திருத்தணி சட்டமன்றத் தொகுதி

திருத்தணி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
நிறுவப்பட்டது1962 - முதல்
மொத்த வாக்காளர்கள்2,90,624[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 3. இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது இத்தொகுதி. திருவள்ளூர், பூந்தமல்லி, திருப்பெரும்புதூர், பள்ளிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை,ருக்குமணிபுரம், கொண்டபுரம்,மதுராபுரம்,எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எம். துரைக்கண்ணு காங்கிரசு 24,312 19.57 கிடம்பை வரதாச்சாரி காங்கிரசு 21,125 17.00
1962 சி. சிரஞ்சீவலு நாயுடு சுயேச்சை 36,884 50.51 எ. ச. தியாகராஜன் முதலியார் காங்கிரசு 34,176 46.81
1967 கே. விநாயகம் காங்கிரசு 27,123 40.34 வி. கே. குப்புசாமி திமுக 25,337 37.68
1971 எ. ச. தியாகராஜன் முதலியார் தமிழரசுக் கழகம் 43,436 61.72 எ. ஏகாம்பர ரெட்டி நிறுவன காங்கிரசு 26,938 38.28
1977 ஆர். சண்முகம் அதிமுக 29,070 43.68 எ. பி. இராமச்சந்திரன் திமுக 22 2.2
1980 ஆர். சண்முகம் அதிமுக 35,845 49.60 டி. நமச்சிவாயம் காங்கிரசு 25,754 35.64
1984 ஆர். சண்முகம் அதிமுக 41,669 50.48 சி. சிரஞ்சீவலு நாயுடு ஜனதா கட்சி 37,740 45.72
1989 பி. நடராசன் திமுக 35,555 41.88 முனு ஆதி அதிமுக (ஜெ) 26,432 31.14
1991 இராசன்பாபு என்கிற தணிகை பாபு அதிமுக 50,037 53.20 சி. சிரஞ்சீவலு நாயுடு ஜனதா தளம் 27,845 29.61
1996 ஈ. ஏ. பி. சிவாசி திமுக 58,049 53.90 கோ. ஹரி அதிமுக 28,507 26.47
2001 ஜி. இரவிராசு பாமக 58,549 50.01 இ. எ. பி. சிவாஜி திமுக 44,675 38.16
2006 கோ. ஹரி அதிமுக 52,871 --- ஜி. இரவிராசு பாமக 51,955
2011 மு.அருண் சுப்பிரமணியம் தேமுதிக 95,918 --- டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், காங்கிரசு 71,988 ---
2016 பி. எம். நரசிம்மன் அதிமுக 93,045 -- அ. கா. சிதம்பரம் திமுக 69,904 --
2021 ச. சந்திரன் திமுக 1,18,005 51.72 கோ. ஹரி அதிமுக 91,061 39.15
  • 1951இல் இத் தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
  • 1967இல் சுயேச்சை தேசப்பன் 14,777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13,540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
  • 1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8,967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15,329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் மூர்த்தி 12,808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் ஜி. ரவிராசு 12,896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சேகர் 11,293 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2021
52.09%
2016
41.84%
2011
50.16%
2006
43.09%
2001
50.01%
1996
53.90%
1991
53.20%
1989
41.88%
1984
50.48%
1980
49.60%
1977
43.68%
1971
61.72%
1967
40.34%
1962
50.51%
1952
19.57%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தணி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ச. சந்திரன் 120,314 52.09% New
அஇஅதிமுக கோ. ஹரி 91,061 39.43% -2.41
நாம் தமிழர் கட்சி எல். அகிலா 12,007 5.20% New
தேமுதிக டி. கிருஷ்ணமூர்த்தி 3,928 1.70% -5.33
நோட்டா நோட்டா 1,665 0.72% -0.21
வெற்றி வாக்கு வேறுபாடு 29,253 12.67% 2.26%
பதிவான வாக்குகள் 230,959 79.47% -1.46%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 598 0.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 290,624
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 10.26%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
135932 140318 27 276297

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
  3. "Tiruttani Election Result". Retrieved 2 Jul 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya