2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
பின்னணிநடப்பு மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 07 சனவரி 2023 உடன் முடிவடைகிறது.[6]முன்னர் நவம்பர் 2018ல் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி கமல் நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது.[7] மார்ச் 2020ல் 22 இந்திய தேசிய காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா தலைமையில் தங்கள் பதவியை துறந்தனர்.[8]இதனால் சட்டப் பேரவையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.[9] உடனடியாக பாரதிய ஜனதா கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் ஆட்சி அமைத்தனர்.[10] தேர்தல் அட்டவணை
அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
கருத்துக் கணிப்புகள்இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள்மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. [13]மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14]
புதிய முதலமைச்சர்தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா ஆகியோர் 13 டிசம்பர் 2023 அன்று பதவி ஏற்றனர்.[16][17] சட்டமன்றத் தலைவராக (சபாநாயகர்) நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டார். இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia