சகா (யாகுட்டியா) குடியரசு (Sakha Republic உருசிய மொழி : Республика Саха (Якутия), . Tr Respublika யாகுத மொழி (Yakutiya); செல்லவும்: [rʲɪspublʲɪkə sɐxa jɪkutʲɪjə] ; யாகுட் :Саха Өрөспүүбүлүкэтэ, Sakha Öröspǖbülükete) என்பது உருசிய கூட்டாட்சியைச் சேர்ந்த ஒரு குடியரசு ஆகும். இது 958.528 மக்கள் தொகை கொண்டது (2010 கணக்கெடுப்பு ),[7] முதன்மை இன மக்கள் யாகுட், மற்றும் உருசியர்கள் ஆவர்.
ஒப்பீட்டளவில் தூர கிழக்கு கூட்டமைப்பு மாவட்டத்தில் பாதி நிலப்பரப்பை இது கொண்டுள்ளது. உலகில் இதுவே தேசிய துணை ஆட்சிப் பகுதியில் பெரிய பகுதியாகும். இது 3.083.523 சதுர கிலோமீட்டர் (1,190,555 சதுர மைல்) பரப்பளவு உள்ளது[12] இதன் பரப்ளவை பார்க்கும்போது அர்கெந்தீனாவை விட பெரியதாகவும், இந்தியாவைவிட சற்று சிறியதாகவும் 3.287.590 சதுர கிலோமீட்டர் (1,269,350 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.[12] இதன் தலைநகர் யாகுட்சுக் நகரமாகும். யாகுட் குடியரசு உருசிய கூட்டமைப்பின் பத்து தன்னாட்சி துருக்கிய குடியரசுகளின் ஒன்றாகும்..[13]
புவியியல்
எல்லைகள்:
உருசியாவின் உள்பிராந்தியங்களான: சுகோட்டா தன்னாட்சி பிராந்தியத்திற்கான எல்லைப்குதி (660 கி.மீ.) , காதன் ஒப்லாஸ்து (1520 கி.மீ.), கபரோவ்ஸ்க் பிரதேசம் (2130 கி.மீ.), அமுர் ஒப்லாஸ்து, சபையகலகி பிரதேசம், இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து, கிராஸ்நாயர்ஸ்க் பிரதேசம் ஆகிய பகுதிகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
கடல் எல்லை; ஆர்க்டிக் பெருங்கடல் ( லப்டேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரிய கடல் உட்பட).
உயர்ந்த இடம் ; பீக் பொபிடா (3,003 மீ), மஸ்-கயையா மலைச் சிகரம் (2959 மீ அல்லது 3,011 மீ)
அதிகபட்ச வடக்கு> தெற்கு தொலைவு : 2,500 கி.மீ. (1,600 மைல்)
அதிகபட்ச கிழக்கு > மேற்கு தொலைவு: 2000 கி.மீ. (1,200 மைல்)
யாகுட்டியா வடபகுதியில் ஹென்ரெய்ட்டா தீவு பகுதியையும், லப்டேவ் கடல், கிழக்கு சைபீரிய கடல், ஆர்க்டிக் பெருங்கடல். ஆகியவற்றைத் தழுவியபடி உள்ளது. வட கோளத்தில் உள்ள இந்த கடல்பகுதி குளிராகவும், பனிசெரிந்தும் காணப்படுபவை. ஆண்டில் 9-10 மாதங்கள் பனி மூடியே காணப்படும்.
கனிம வளங்கள்
இப்பகுதி கனிமவளம் மிக்க பகுதியாகும் இங்கு நிலத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, வெள்ளி, வெள்ளீயம்,தங்குதன் போன்ற பல கனிமங்கள் உள்ளன உருசியாவில் வெட்டப்படும் வைரங்களில் 99% இந்த குடியரசிலேயே வெட்டப்படுகிறது. இது உலக வைரத் தேவையை 25% பூர்த்தி செய்கிறது.
காலநிலை
யாகுட் அதன் காலநிலை கொண்டு சிறப்பாக அறியப்படுகிறது, இதன் உச்ச அளவு குளிரால் வட கோளத்தில் மிகவும் குளிரான பிரதேசமாக இருக்கிறது. மிகக் குறைந்த வெப்பநிலையை எப்போதும் கொண்டிருக்கும் இங்கே உள்ள பதிவுகள் காட்டுகின்றன. வட கோளத்தின் குளிரான, வெப்பநிலையாக -67,8 பாகை செல்சியஸ் (-90.0 ° பா), 1892 ஆம் வருடம் பதியப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற குறைந்த வெப்பநிலை -71,2 ° செ (-96.2 பா) 1926 ஆம் ஆண்டு நிலவியது.
சராசரி சனவரி வெப்பநிலை: -28 டிகிரி செல்சியஸ் (-18 ° பா) வரை (கடற்கரைப்பகுதிகளில் -47 டிகிரி செல்சியஸ் (-53 ° பா) நிலவுகிறது.
சராசரி சூலை மாத வெப்பநிலை: +19 பாகை செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்) (கடற்கரைப் பகுதிகளில் +19 °செ (66 °பா) என வெப்பநிலை நிலவுகிறது. என்றாலும், மிகவும் வெப்பமான நாளாக யாகூட்டில் ஒரு சூலை மாதப்பதிவில் +38.4 பாகை செல்சியஸ் (101.1 ° பா) வரை) வரை பதிவானது.
ஆண்டு சராசரி ஆண்டு மழை : 700 மி.மீ (மத்தியப் பகுதிகளில்). .200மிமீ (கிழக்கு யாகுட் மலைகளில்)
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).