எட்மண்ட் இல்லரி
சர் எட்மண்ட் ஹிலாரி (Sir Edmund Percival Hillary; ஜூலை 20, 1919 – ஜனவரி 11, 2008) நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர்; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951, 1952களில் இவரின் சோ ஒயு என்ற மலை ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் மே 29 1953ம் நாள் தனது 33ம் அகவையில் நேபாள நாட்டின் ஷெர்ப்பா இனத்தைச் சேர்ந்த மலையேறுநர் டென்சிங் நோர்கே வுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும். இளமை![]() நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் நீ கிளார்க் எனுமிடத்தில் எட்மண்ட் ஹிலாரி பிறந்தார்.[1] இவரது தந்தை அகஸ்டஸ் ஹிலாரி தாயார் ஜெர்ட்ரூட் ஹிலாரி. வட ஆக்லாந்தின் கல்லிபோலி போரில் இவரது தந்தை பணியாற்றியதால் ஆக்லாந்து அரசாங்கம் அவரது குடும்பத்துக்கென தெற்கு ஆக்லாந்தில் டுவாக்காவு என்ற இடத்தில் நிலமொதுக்கியது. எனவே, 1920களில் ஹிலாரியின் குடும்பம் அங்கு குடியேறியது.[2] அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது.[1] ஹிலாரி டகாவுவில் உள்ள தொடக்கப்பள்ளியில் (இது பிறகு ஆக்லாந்து இலக்கணப்பள்ளி எனப்பட்டது) தனது கல்வியைத் தொடங்கினார்.[2] அவர் இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார், உயர்நிலைப் பள்ளியில் சராசரி மதிப்பெண்களைப் பெற்றார்.[3] தன்னுடன் பயின்றவர்களைவிட ஹிலாரி தோற்றத்தில் சற்று குறைந்து காணப்பட்டதால், வெட்கத்தின் காரணமாக எப்பொழுதும் புத்தகங்களைப் படிப்பதிலும் விநோதமான சாகச நிகழ்ச்சிகள் நிறைந்த உலகினைக் கற்பனை செய்வதுமாக காலம் கழித்தார். உயர் கல்வி கற்க தனது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நாள்தோறும் இரண்டு மணிநேரம் தொடருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தை பயனுள்ளதாக்க ஹிலாரி புத்தகங்களை வாசித்தார். அதனால் வாழ்க்கையில் அவருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது; ஹிலாரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி ராபியூ மலைகள் என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹிலாரிக்கு ஆர்வம் பிறந்தது. அவர் உடல் ரீதியாகவும் தனதுடன் பயிலும் தோழர்களைவிடத் தன்னை வலிமை வாய்ந்தவராக நினைக்கத் தொடங்கினார்.[4] ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிதம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றார். 1939ல் இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸ் மலையில்[2] உள்ள மவுண்ட் குக் மலைக்கருகிலுள்ள மவுண்ட் ஆலிவர் என்ற பன்னிரெண்டாயிரம் அடி உயரமுள்ள மலையில் தனது சகோதரர் ரெக்ஸ் என்பவருடன் ஏறினார். கோடைக்காலத்தில் மலையேறித் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டதால் குளிர்காலத்தில் மலை ஏறுவதற்கு அப்பயிற்சி உதவியாய் இருந்தது.[5] ஹிலாரி ரேடியண்ட் லிவிங் என்ற மலையேறுவோருக்கான கழகத்தில் சேர்ந்தார். அங்கு உடல் நல ஆலோசகர் ஹெர்பெர்ட் சட்க்ளிஃப் என்பவர் இவருக்கு போதித்தார். இதன் உறுப்பினர்களுடன் சுற்றுலாவாகச் சென்று சேர்ந்து மலையேறுவதை ஹிலாரி மிகவும் நேசித்தார்.[6] இரண்டாம் உலகப் போரில் பங்கு![]() இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து வான்படையில் சேர்ந்த அவர் ராயல் நியூசிலாந்து வான்படையில் நிரந்தரமாகச் சேர விண்ணப்பித்தார். ஆனால் அவரது மதம் சாந்த கொள்கைகள் இதற்கு ஒவ்வாததாக அவர் எண்ணியதால் தனது விண்ணப்பத்தைத் திரும்பப்பெற்றார்.[7] 1943ல் பசிபிக் கடற்பகுதியில் ஜப்பானின் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்டபோது, சமாதானம் மற்றும் அமைதி எண்ணமுடைய ஹிலாரியும் கட்டயாமாக வான்படையில் சேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ராயல் நியூசிலாந்து வான்படையில் இணைந்து படைப்பிரிவுகள் 5, 6 மற்றும் கேடலினா என்ற பறக்கும் படகுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். 1945ல் பிஜித் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கு சண்டையிட அனுப்பப்பட்டபோது ஒரு படகில் ஏற்பட்ட பெரும் விபத்தில் காயமடைந்தார். எனவே தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.[7] மலையேற்றப் பயணங்கள்வான்படையில் பணியாற்றியபோது வார இறுதியில் அருகிலிருந்த மவுண்ட் எக்மென்ட் என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. ஹாரி ஏயர்ஸ், மிக் சல்லிவன் ஆகியோர் தலைமையில் ஹிலாரி, ரூத் ஆடம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று நியூசிலாந்தின் த்ன் எல்லியிலுள்ள மவுண்ட் குக் மலையின் மிக உயர்ந்த சிகரமாகிய அவுராக்கி உச்சியை 1948 ஜனவரி 30 அன்று அடைந்தது.[8] 1953ல் மிகப் பெரிய உலக சாதனையை செய்வதற்கு முன்னர் ஹிலாரி 1951ல் எரிக் ஷிப்டான் என்பவரின் தலைமையிலான பிரித்தானியக் குழுவின் மலையேறுநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார். எரிக் ஷிப்டான் தலைமையிலான பிரித்தானியக் குழுவில் இடம்பெற்றிருந்த எட்மண்ட் ஹிலாரியும் ஜியார்ஜ் லோவே என்பவரும் சோ ஒயு மலையேற முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது.[9] அதன் பிறகு இக்குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.[10] எவரெஸ்ட் பயணம்1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர்ப் பலியிலும் முடிந்தன. 1952ம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரித்தானிய குழு ஒன்று 1953ம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது. அகவாழ்வுஎட்மண்ட் 1953ம் ஆண்டு மேரி ரோஸ் என்பவரை மணம் முடித்தார். அவர் மூலமாக ஒரு மகனையும் இரு மகள்களையும் பெற்றெடுத்தார். 1975ம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தில் அவரது மனைவியும் ஒரு மகளும் பலியாயினர். 1989 ஆம் ஆண்டு ஜீன் மல்க்ரூ என்பவரை இரண்டாவதாக மணம் முடித்தார். மரணம்எட்மண்ட்தனது 88ம் அகவையில் இதயநோயினால் காலமானார். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia