மான்டெக் சிங் அலுவாலியா
மான்டெக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia, பிறப்பு: நவம்பர் 24, 1943) ஓர் இந்தியப் பொருளியலாளரும் ஆட்சிப் பணி அதிகாரியும் ஆவார். இவர் முன்னாள் இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவர். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில் தன்னாட்சியான மதிப்பீடு அலுவலகத்தின் முதல் இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இளமையும் கல்வியும்மான்டெக் சிங் அலுவாலியா பாக்கித்தானின் ராவல்பிண்டியில் வங்காள மற்றும் பஞ்சாபி கலப்புக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் செகந்தராபாத்திலுள்ள புனித பாட்றிக் உயர்நிலைப் பள்ளியிலும் தில்லி மதுரா சாலையிலுள்ள தில்லி பப்ளிக் ஸ்கூலிலும் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் கல்வி கற்றார். கலையில் இளங்கலைப் பட்டத்தை தில்லியின் புனித இசுடீபன் கல்லூரியிலும் (தில்லி பல்கலைக்கழகம்) முதுகலைப் பட்டத்தையும் முதுதத்துவமாணி பட்டத்தையும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டெலன் கல்லூரியிலும் பெற்றார். ஆக்சுபோர்டில் இருந்தபோது மதிப்புமிக்க ஆக்சுபோர்டு சங்கத்தின் தலைவராக இருந்தார். The 164-ஆண்டு-தொன்மையான இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப் படுத்தி உள்ளது.[1] பணிவாழ்வுஅலுவாலியா, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றபிறகு, உலக வங்கியில் சேர்ந்தார். 28ஆம் அகவையிலேயே உலக வங்கியின் அலுவலக முறைமையில் மிக இளமையான "கோட்டத் தலைவராக" விளங்கினார். அனைத்துலக நாணய நிதியத்தில் சேர்வதற்கு முன்னதாக இந்தியத் திட்டக்குழுவில் உறுப்பினராக அலுவாலியா இருந்து வந்தார். இந்தியப் பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இந்தியக் குடியியல் பணிகளில் இல்லாத அலுவாலியா நடுவண் அரசில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்:
வாசிங்டனில் உள்ள செல்வாக்கு மிக்க நிதி அறிவுரை அமைப்பான முப்பதின்மர் குழுவில் (Group of Thirty) உறுப்பினராவார். தனி வாழ்வுஅலுவாலியா சக பொருளாதார அறிஞர் இஷேர் ஜட்ஜ் அலுவாலியாவை திருமணம் புரிந்து இரண்டு மக்களுக்கு தந்தையாக உள்ளார்.[2] [3][4][5] விருதுகளும் பெருமைகளும்
விமரிசனம்நகர்புறப் பகுதிகளில் மாதத்திற்கு ரூ. 859.6 செலவு செய்பவர்களும் ஊரகப் பகுதிகளில் ரூ. 672.8 செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என வரையறுத்த அதே வேளையில் தமது அலுவலகத்தில் இரு கழிவறைகளின் மேம்பாட்டிற்காக 35 இலட்சம் ருபாய்களை செலவு செய்ததற்காக அலுவாலியா இந்திய ஊடகங்களாலும் செயற்பாட்டாளர்களாலும் பொதுமக்களாலும் விமரிசனம் செய்யப்பட்டார். ஊடகங்கள் திட்டக்குழுவின் வறுமைக்கோட்டிற்கான வரையறை முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாததது என குறை கூறியுள்ளனர். ஏழைகளுக்கு ஒரு சீர்தரத்தையும் செல்வமிக்கவர்களுக்கு வேறொரு சீர்தரத்தையும் வரையறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.[6][7][8][9] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia