ராம் நாராயண்
இராம் நாராயண் (25 திசம்பர் 1927 – 9 நவம்பர் 2024) பண்டிட் இராம் நாராயண் என அறியப்படுபவர். சாரங்கி இசைக்கருவியில் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞராவார். சாரங்கியை பக்கவாத்தியமாக கருதிவந்த இசைப்பிரியர்களிடம் அதற்கான முதன்மை நிலையை நாட்டியதில் இவரது பங்கு சிறப்பானது ஆகும். புகழ்பெற்ற தபலா இசைக்கருவி கலைஞர் பண்டிட் சதுர்லாலின் தமையனாவார்.[2][3][4] இவரது சீரிய இசையைப் பாராட்டுமுகமாக 2005இல் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்புஇராசத்தான் மாநில உதய்பூர் நகரில் இசைக் குடும்பத்தில் பண்டிட் நாதுஜி பியாவத்திற்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் தில்ரூபா இசைக்கருவி வாசிப்பதில் சிறந்து விளங்கினார். தமது ஏழாம் அகவையிலிருந்து உஸ்தாத் மெகபூப் கான்,பண்டிட் உதய்லால்,பண்டிட் மாதவ பிரசாத், உஸ்தாத் அப்துல் வாகீத் கான் ஆகியோரிடம் சாரங்கி இசைக்க பயின்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia