குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங் (Khushwant Singh; பெப்ரவரி 2,1915 - மார்ச்சு 20, 2014) பஞ்சாபை சேர்ந்த முதுபெரும் புதின ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் பல்வேறு பத்திரிகைகள், வார இதழ்களில் பணியாற்றியுள்ளார். இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷண் விருதை 2007 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவின் கீழ் பெற்றார். மேற்கத்திய கலாச்சாரத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இவரது பெரும்பாலான படைப்புகள் இருக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு. இளமையும் கல்வியும்பாக்கிச்தானின் பஞ்சாபில் உள்ள ஹதாலியில் 1915ஆம் ஆண்டு பிப்பிரவரி 2இல் பிறந்தார்.தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்த குஷ்வந்த் தில்லி,லாகூர் ஆகிய நகரங்களில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியிலும் பயின்றார். பணிகள்குஷ்வந்த்சிங் 1947இல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சேருவதற்குமுன் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நடுவணரசு திட்டக்குழுவுக்காக யோஜனா என்னும் பத்திரிக்கையை நிறுவினார்.மேலும் தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா ’தி இந்துஸ்தான் டைம்ஸ்’ ’தி நேசனல் ஹெரால்ட்’ ஆகிய செய்தி இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் எழுதிய சில நூல்கள்
மறைவு2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 அன்று தனது 99ஆவது வயதில் காலமானார். வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia