மலேசிய கூட்டரசு சாலை 13
மலேசிய கூட்டரசு சாலை 13 (ஆங்கிலம்: Malaysia Federal Route 13; மலாய்: Laluan Persekutuan Malaysia 13) என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான், கோலா பிலா மாவட்டம், சுவாசே நகரத்தையும் பகாவ் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[1] 13.69 கி.மீ. (8.51 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இரு முக்கிய நகரஙகளான சுவாசே நகரம்; மற்றும் பகாவ் நகரம்; ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் சாலையாக அறியப்படுகிறது. பொதுமலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பகாவ் நகரத்தில் உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. சுவாசேசுவாசே நகரம் (Juasseh), மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[2] நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் நகரத்தில் இருந்து சுவாசே நகரம் ஏறக்குறைய 48 கி.மீ.; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 114 கி.மீ.; தொலைவில் உள்ளது. இடைமாற்று வழிகளின் பட்டியல்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia