மலேசிய கூட்டரசு சாலை 11
மலேசிய கூட்டரசு சாலை 11 (ஆங்கிலம்: Malaysia Federal Route 11; மலாய்: Laluan Persekutuan Malaysia 11 என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும். மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1] இந்தச் சாலை பெரா ஏரி மற்றும் பண்டார் துன் அப்துல் ரசாக் நகடம் வழியாகச் சென்று நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்களின் எல்லையைக் கடக்கிறது. 61.33 கி.மீ. (38.11 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் செர்த்திங் நகரத்தையும் பகாங் பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்தையும் இணைக்கிறது. பொதுமலேசிய கூட்டரசு சாலை 10-இன் கிலோமீட்டர் '0' (Kilometre Zero) என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செர்த்திங் நகரத்தில் உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 10-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia