துன் ரசாக் நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 12 அல்லது துன் ரசாக் நெடுஞ்சாலை அல்லது சிகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 12; Tun Razak Highway; Segamat-Kuantan Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 12; Lebuhraya Tun Razak; Lebuhraya Segamat-Kuantan) என்பது மலாயா தீபகற்பத்தில் ஆசிய நெடுஞ்சாலை 142 திட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு மலேசிய கூட்டரசு சாலை ஆகும்.[1] 146.8 கி.மீ. (91.2 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் இருந்து பகாங் மாநிலத்தின் குவாந்தான் கம்பாங் நகரம் வரை செல்கிறது. வரலாறுமலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படும் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த இருவழிக் கூட்டரசு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இந்தச் சாலை, நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 142 வலையமைப்பின் ஒரு பகுதியாகும். பொதுமலேசிய கூட்டரசு சாலை 12-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை, ஜொகூர்-பகாங் எல்லையைப் பகாங் மாநிலத்தின் பெர்விரா ஜெயா எனும் இடத்திற்கு அருகே கடந்து செல்கிறது.[2] மலேசிய கூட்டரசு சாலை 12-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. வரலாறுதுன் ரசாக் நெடுஞ்சாலை என்பது, பகாங் சுல்தான் அகமத் சாவின் சிந்தனையில் உருவானது. துன் ரசாக் நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1970-ஆம் ஆண்டில் தொடங்கி 1983-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. பகாங் சுல்தான் அகமத் சா அந்த நேரத்தில் யாங் டி-பெர்துவான் அகோங்காக இருந்தபோது துன் ரசாக் நெடுஞ்சாலையை 1983-ஆம் ஆண்டில் திறந்து வைத்தார். துன் ரசாக் நெடுஞ்சாலை 19 அக்டோபர் 1989 அன்று மலேசிய கூட்டரசு சாலை 12 என அரசிதழில் வெளியிடப்பட்டது.[3] இடைமாற்று வழிகளின் பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia