மலேசிய கூட்டரசு சாலை 24
மலேசிய கூட்டரசு சாலை 24 அல்லது மூவார்–யோங் பெங் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 24; அல்லது Muar–Yong Peng Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 24 அல்லது Jalan Muar–Yong Peng) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1] மேற்கில் மூவார் நகரத்தையும்; கிழக்கில் யோங் பெங் நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, யோங் பெங் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2] பொதுஇந்தச் சாலை 65.31 கிமீ (40.58 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் பத்து பகாட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 24-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது மூவார் நகரில் உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3] சிறப்புக் கூறுகள்இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:
வரலாறுமலேசிய கூட்டரசு சாலை 24; ஜொகூர் மாநிலத்தின் தொடக்கக்காலச் சாலைகளில் ஒன்றாகும். 1869-இல் கிராமச் சாலையாக உருவாக்கப்பட்டு; 1870-இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் 1890-இல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த மலேசிய கூட்டரசு சாலை 24; மலாயாவின் மிக நீளமான சாலையாகச் சாதனையும் படைத்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது இந்த சாலை, குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளது. விளக்கம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia